நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக, இவரே இயக்கி - நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் வெளியானது. தனுஷின் 50-ஆவது திரைப்படமாக வெளியான இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. வடசென்னை பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், தனுஷ் இதற்க்கு முன் ஏற்று நடித்திராத தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடிக்க, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடித்திருந்தனர். மேலும் செல்வராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டி இருந்தார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்திற்கு படத்தொகுப்பு செய்திருந்த 'ராயன்' படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.