மாதவன் வீட்டில் நடந்த விசேஷம்; திடீர் விசிட் அடித்த அஜித்! வைரலாகும் புகைப்படம்!

Published : Nov 05, 2024, 11:26 AM IST

தல அஜித், பிரபல முன்னணி நடிகர் மாதவன் வீட்டுக்கு சென்ற புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
மாதவன் வீட்டில் நடந்த விசேஷம்; திடீர் விசிட் அடித்த அஜித்! வைரலாகும் புகைப்படம்!
Ajith Visit Madhavan House

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கும் நடிகர் அஜித், துபாயில் இருக்கும் நடிகர் மாதவன் வீட்டில் நடந்த விசேஷத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தான் தற்போது படு வைரலாகி வருகிறது.
 

25
ShaliniAnd Madhavan Photo

அஜித்தின் மனைவி ஷாலினி, கடந்த 2000-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் 'அலைபாயுதே'. பல காதலர்களின் ஃபேவரட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்தில், ஷாலினி - மாதவன் லவ் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும். அதே போல் இப்படத்தில் ஸ்வர்ணலதா குரலில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற எவனோ ஒருவன் யாசிக்கிறாள் பாடல் நம் நெஞ்சத்தில் புகுந்து காதலர்கள் இடையே பிரிவு ஏற்படும் போது  அதன் வலியை உணர்த்துவது போல் இருக்கும்.
 

35
Shalini Meet Madhavan

இந்த படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பின்னர், ஷாலினி - மாதவன் இடையே ஆன  நட்பு தொடர்ந்தாலும், சூழ்நிலை காரணமாக இருவரும் அதிகம் பார்த்து கொள்வது இல்லை. இந்நிலையில் கடந்த வாரம் ஷாலினி, சுமார் 24 வருடங்களுக்கு பின்னர் மாதவனை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, என்றென்றும் புன்னகை என பதிவிட்டிருந்தார். 

45
Madhavan Family

இந்த புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் மாதவன் குடும்பத்தினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், வெளியாகி உள்ளது. தற்போது வெகேஷனுக்காக துபாய் சென்றுள்ள அஜித், தனது நண்பர் மாதவன் வீட்டில் நடந்த, தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். 
 

55
Madhavan Family Diwali Celebration

இந்த சிறப்பு தீபாவளி கொண்டாட்டத்தில், மாதவனின் குடும்ப நண்பர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக... வெள்ளை நிற டீ-ஷர்ட் அணிந்து, கூலிங் கிளாஸை டீ ஷர்ட்டில் தொங்கவைத்தபடி, போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories