தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது ரஜினி, விஜய், கமல், அஜித் போன்ற நடிகர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. ஆனால் கோலிவுட் நாயகி ஒருவர் அந்த ஆயிரம் கோடி வசூலை தன்னுடைய முதல் படத்திலேயே எட்டிப்பிடித்து அசத்தி இருக்கிறார். அந்த நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகை யார் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
26
Nayanthara Childhood Photo
அந்த நடிகை வேறுயாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். இவர் தான் பாலிவுட்டில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே 1000 கோடி என்கிற இமாலய வசூலை எட்டிப்பிடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நயன்தாரா. அட்லீ இயக்கிய அப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடி வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது.
36
Nayanthara Rare Childhood photo
நயன்தாராவின் ஒரிஜினல் பெயர் டயானா மரியம் குரியன். இவர் சினிமாவுக்காக தன் பெயரை மாற்றிக் கொண்டார். நாளடைவில் அதுவே அவரது அடையாளமாக மாறியது. ஐயா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா பின்னர் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.
தொடர்ந்து கதாநாயகியை மையமாக வைத்து உருவான அறம், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் வெற்றியால் அவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்து கிடைத்தது. நயன்தாராவுக்கு தற்போது வயது 40ஐ நெருங்கிவிட்டாலும் சினிமாவில் அவருக்கான மவுசு இன்னும் குறையவில்லை. தற்போது கைவசம் அரை டஜன் படங்களுடன் கோலிவுட்டின் பிசியான நாயகியாக வலம் வருகிறார் நயன்.
56
Nayanthara Movie Line up
அவர் தற்போது தமிழில் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சசிகாந்த் இயக்கத்தில் அவர் நடித்த டெஸ்ட் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் மலையாளத்தில் நிவின் பாலி உடன் டியர் ஸ்டூடண்ட்ஸ், கன்னடத்தில் யாஷுக்கு அக்காவாக டாக்ஸிக், தமிழில் கவினுக்கு ஜோடியாக ஹாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்.
66
Nayanthara Family
நடிகை நயன்தாராவுக்கு சினிமா மூலம் கிடைத்த சொத்து தான் விக்னேஷ் சிவன். நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நயன், சுமார் 7 வருட காதல் வாழ்க்கைக்கு பின் விக்கியை கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. வாடகைத் தாய் மூலம் இந்த இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர் விக்கி - நயன் ஜோடி.