தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஹரிஷ் கல்யாண் கில்லாடி. சமீப காலமாக இவர் மூவி சாய்ஸ் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இவர் நடித்த பார்க்கிங் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டு லப்பர் பந்து படம் மூலம் பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். இப்படத்தை புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது.
24
Lubber Pandhu
லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் சஞ்சனா, அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, காளி வெங்கட், பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மாமனார், மருமகன் இடையேயான ஈகோ மோதலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார் தமிழரசன். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் அன்பு கேரக்டர் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ, அதே அளவு அட்டக்கத்தி தினேஷ் நடித்த கெத்து கேரக்டரும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கேரக்டரின் பெயருக்கு ஏற்றார் போல் அட்டகத்தி தினேஷை செம்ம கெத்தாக காட்டி இருந்தனர்.
லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆனதும் ஒரு காரணம். படத்தில் ஹரிஷ் கல்யாண் - சஞ்சனா இடையேயான காதல் காட்சிகளைவிட, கெத்து தினேஷ் - சுவாசிகா ஜோடி இடையேயான காதல் காட்சிகள் தான் ஹைலைட்டாக அமைந்திருந்தன. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இந்நிலையில் லப்பர் பந்து படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
44
Lubber Pandhu Movie Logic Mistake
லப்பர் பந்து படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு நிஜத்தில் 34 வயது ஆகிறது. ஆனால் அப்படத்தில் அவருக்கு மாமியாராக நடித்திருந்த நடிகை சுவாசிகாவுக்கு நிஜத்தில் 32 வயது தான் ஆகிறது. ஹரிஷ் கல்யாணை விட 2 வயது கம்மியான சுவாசிகாவை அவரது மாமியாராக நடிக்க வைத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என கூறி வருகின்றனர். இதற்கு முன்னர் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் இதுபோன்று தன்னைவிட வயது குறைந்த நடிகைகளுக்கு மகனாக நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.