உலக சினிமாவை தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, பிரபல இயக்குனர் ராஜ மௌலி, ஒரு இயக்குனராக பிரபலமாவதற்கு முன்பே ஒரு படத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்து பிரபலமானவர். அந்த புகைப்படம் தான் இது.
26
Rajamouli Debut Movie
பிரபல கதாசிரியர், விஜயேந்திர பிரசாத்தின் மகனான ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஸ்டூடண்ட் நெம்பர் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ஜூனியர் என் டி ஆருக்கு முதல் மெகா ஹிட் வெற்றி படமாக மாறியது. இப்படம் தமிழிலும், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே தமிழில் எடுக்கப்பட்டது. இதில் சிபிராஜ் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு கைகொடுத்த இப்படம் தமிழில் சிபிக்கு கைகொடுக்க தவறி விட்டது.
தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்த ராஜ மௌலி, முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்கிய சிம்ஹாட்ரி, சை, சம்ரபதி, மகதீரா, ஈகா, பாகுபலி என இவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் கோடிகளில் வசூல் சாதனை செய்தது.
46
RRR Movie
குறிப்பாக பாகுபலி திரைப்படம் சுமார் ரூபாய் 1000 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், RRR திரைப்படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியது மட்டும் இன்றி, ஆஸ்கர் விருதையும் வென்றது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக தான், கோல்டன் குலாப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றார் இசையமைப்பாளர் கீரவாணி.
தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பான் இந்தியா இயக்குனராக அறியப்படும் ராஜமௌலி, இயக்குனராக மட்டும் இன்றி, சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 10 வயதில் ஒரு படத்தில் நடித்ததாக ராஜமௌலி 'ஆர்ஆர்ஆர்' பட விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.
66
Rajamouli Childhood Photos
ராஜமௌலி குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படத்தின் பெயர் 'பிள்ளைநகரோவி'. இந்தப் படத்தில் பால கிருஷ்ணராக நடித்தார். 1983-ல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ராஜமௌலிக்கு 10 வயது. ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.
ராஜமௌலி ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்ய படுத்தியுள்ளது. மேலும் இதுவரை 13 படங்களை இயக்கியுள்ள நிலையில் அதில் ஒரு படம் கூட தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.