ஜோதிகாவுக்காக கதை பிடிக்காமல் சூர்யா நடித்த திரைப்படம்! சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?

Published : Nov 04, 2024, 07:12 PM IST

சூர்யா ஜோதிகாவுடன் நடித்த திரைப்படம் ஒன்றில் விருப்பமே இல்லாமல் நடித்திருந்தாலும்... அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற கதையை அண்மையில் சூர்யா பகிர்ந்துள்ளார்.  

PREV
16
ஜோதிகாவுக்காக கதை பிடிக்காமல் சூர்யா நடித்த திரைப்படம்! சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
Actor Suriya

கோலிவுட் திரையுலகமே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, ஒற்றுமையான நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா-  ஜோதிகா இருவரும் காதல் ஜோடிகளாக இருந்த போது, நடித்த திரைப்படம் குறித்து சமீபத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

26
Suriya and Jyothika Love

சூர்யா - ஜோதிகா இருவரும் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்து நடித்தனர். முதல் படத்தின் போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு,  இதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்த 'காக்க காக்க' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. காதலர்களாக இருவரும் மாறிய பின்னர் பேரழகன், மாயாவி, என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

டாப் ஹீரோவுக்கு ஸ்ரீதேவியை திருமண செய்து வைக்க போடப்பட்ட பிளான்? போனி கபூரால் இடிந்து போன தாயார்!
 

36
Suriya Family

மேலும் சூர்யா - ஜோதிகா இருவரும் திருமணத்துக்கு முன்பு இணைந்து நடித்த, 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் காதல் படங்களை விரும்பி பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.  ஒப்பேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், மென்மையான ரொமான்டிக் ட்ராமா ஜானரில் வெளியானது.
 

46
Munbe Vaa (Sillunu Oru Kadhal)

இப்படத்தில் ஜோதிகாவை தவிர, பூமிகா, சுகன்யா, வடிவேலு, சந்தானம், உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையில், இப்படத்தில் இடம்பெற்ற முன்பே வா, நியூயார்க்  சில்லுனு ஒரு காதல் மஜா மஜா பாடல் நல்ல வரவேற்பை பெற்றன.

TRP-யில் விஜய் டிவி படு மோசம்! புதிய தொடர்களை வைத்து ரேட்டிங்கை அடிச்சு பறக்கவிடும் சன் டிவி!

56
Suriya and Jyothika

இந்த படத்தின் கதையை இயக்குனர் ஒப்பேலி கிருஷ்ணா கூறும் போது... சூர்யாவுக்கு ஏனோ கதை மீது பெரிதாக ஈர்ப்பு வரவில்லையாம். ஆனால் ஜோதிகாவுக்கு அவருடைய குந்தவை கதாபாத்திரம் பிடித்துப் போனதால், இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிய வந்தவுடன், யாரோ ஒருவர் ஏன் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்? அதை நாமே செய்துவிடலாம் என அரை மனதோடு தான் இந்த படத்தில் நடிக்க சம்பாதித்தார்.

66
Sillunu oru kadhal

ஆனால் இப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதேபோல் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம் இடம் பிடித்த ஒரு படமாகவும் தற்போது வரை இருந்து வருகிறது. இந்த படத்தில் உள்ள காதல் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்ததே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக பார்க்கப்பட்டது. இந்த தகவலை அண்மையில் சூர்யா பகிர்ந்து உள்ளார்.

3 பழைய சீரியல்களை பேக்கப் பண்ணிவிட்டு... அடுத்தடுத்து 4 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி!

Read more Photos on
click me!

Recommended Stories