Thalapathy 69
தளபதி விஜய் தன்னுடைய அரசியல் கட்சி பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வரும் அதே நேரம், தன்னுடைய 69ஆவது மற்றும் இறுதி திரைப்பட பணிகளையும் முழுகிச்சல் கவனித்து வருகின்றார் அவர். பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69ஆவது திரைப்படத்தை தளபதி விஜய் இப்போது நடித்து வரும் நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏற்கனவே விஜய்யோடு இணைந்து பீஸ்ட் படத்திலிருந்து பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஜோதிகாவுக்காக கதை பிடிக்காமல் சூர்யா நடித்த திரைப்படம்! சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
TVK Leader Vijay
இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிமுகம் செய்து வைத்த அதே நேரம், அவருடைய திரையுலக ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதாவது, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், ஆகையால் திரை உலகிற்கு முற்றிலுமாக குட் பை சொல்ல உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படம் வெளியாகி உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
Vijay Movie
இந்த சூழலில் தளபதி விஜயின் 69வது திரைப்படம் விறுவிறுப்பாக இப்பொழுது உருவாகி வருகிறது. அரசியல் களம் சார்ந்த கதையாக இது இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பிரபல இயக்குனருக்கு வினோத், உலக நாயகன் கமல்ஹாசனுக்காக ஒரு திரைக்கதையை அமைத்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் மேற்கொண்டு நகராமல் போன நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனுக்காக எழுதிய அரசியல் கதையை தான் தளபதி விஜய்க்கு வினோத் பயன்படுத்தியுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது.
Thalapathy 69 Movie
இந்த நிலையில் ஏற்கனவே தளபதி விஜயின் லியோ மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படங்களை வெளிநாட்டுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்ட "பார்ஸ் பிலிம்" என்ற நிறுவனம் தற்பொழுது தளபதி விஜயின் 69 ஆவது திரைப்படத்தையும் வெளிநாடுகளில் வெளியிட தேவையான உரிமையை சுமார் 78 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவின் முதல் கலர் படம்; அதை இயக்கி தயாரித்தது ஒரு தமிழர் தான் தெரியுமா?