தமிழ் சினிமாவில் நேரடியாக இன்னும் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் (கஸ்டடி படம் தவிர), பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கு பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற பிரபல நடிகை சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆயத்தமானார் நாக சைதன்யா.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஜோடிக்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட அவர்கள் இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விரைவில் இந்த ஜோடிக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் முதற்கட்ட படப்பிடிப்பே முடியல; அதற்குள் வசூல் வேட்டையை துவங்கிய "தளபதி 69"!