அமரனுக்கு முன் கமல் தயாரித்து கோடி கோடியாய் வசூல் அள்ளிய டாப் 5 மாஸ்டர் பீஸ் மூவீஸ்

First Published | Nov 5, 2024, 8:50 AM IST

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், இதற்கு முன் அவர் தயாரித்த 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை பார்க்கலாம்.

Kamalhaasan

கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அவரது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அண்மையில் அவர் தயாரித்த அமரன் படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. சுமார் 150 கோடி வசூலைக் கடந்து திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வருகிறது அமரன் திரைப்படம். இப்படத்திற்கு முன்னர் கமல் தயாரித்த 5 மாஸ்டர் பீஸ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Apoorva Sagodharargal

அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று விதமான கேரக்டர்களில் நடித்திருப்பார். இப்படத்தை தயாரித்ததும் கமல்ஹாசன் தான். கமலின் கெரியரில் ஒரு மைல்கல் படமாக அபூர்வ சகோதரர்கள் பார்க்கப்படுகிறது. அதிலும் அப்பு கதாபாத்திரத்தில் கமல் நடித்ததை பார்த்து பாராட்டாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருப்பார்.

Tap to resize

Thevar Magan

தேவர் மகன்

கமல்ஹாசன் நடித்து, தயாரித்தது மட்டுமின்றி கதை வசனம் எழுதிய படம் தான் தேவர் மகன். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. காலம் கடந்து கொண்டாடப்படும் தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் கடந்த 1992-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் கமல்ஹாசன் உடன் கெளதமி, சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்திருந்தனர். பரதன் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனுக்கு ராஜயோகம்! SKவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக்கிய படங்கள் - ஒரு பார்வை

Virumandi

விருமாண்டி

கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் விருமாண்டி. இப்படத்தை கமல்ஹாசனே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் பக்கா தேனிக்காரராகவே வாழ்ந்திருந்தார் கமல். இப்படத்தில் தான் முதன்முதலில் லைவ் டப்பிங் செய்யப்பட்டது. இப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கொண்டாடப்படுகிறது. இப்படத்தில் கமலுடன் பசுபதி, அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

viswaroopam

விஸ்வரூபம்

தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது கமலின் விஸ்வரூபம் தான். இப்படம் கடந்த 2013-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை முதலில் நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை கைவிட்டார். ஆனால் நாளடைவில் அதுவே தற்போது ஓடிடி தளங்களாக உருவெடுத்து இருக்கிறது.

Vikram

விக்ரம் 

கமல்ஹாசன் கெரியரில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம் என்றால் அது விக்ரம் தான். இப்படத்திற்கு முன்னர் சுமார் 4 ஆண்டுகள் படங்களிலேயே நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் பாகுபலியாக மாற்றிய அமரன்! 4 நாட்களில் இம்புட்டு வசூலா?

Latest Videos

click me!