ஓடிடியில் ரஜினியை பதம்பார்க்க வரும் ஜூனியர் என்.டி.ஆர்! தேவரா OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published | Nov 5, 2024, 11:16 AM IST

ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய தேவரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Devara

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். குறிப்பாக ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்த ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக நடித்துள்ள படம் தான் தேவரா. இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் கொரட்டலா சிவா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோலிவுட்டின் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து இருந்தார்.

Junior NTR, Jhanvi Kapoor

தேவரா படத்தின் மூலம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீதேவி முதன்முறையாக தென்னிந்திய மொழி படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் இது பான் இந்தியா படமாக உருவானதால் இப்படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. தேவரா திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... நவம்பர் முதல் வாரமே ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

Tap to resize

Devara OTT Release Date

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்ததால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி ரூ.500 கோடி வசூலை வாரிக்குவித்தது. தேவரா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 6 வாரங்கள் ஆகும் நிலையில் தற்போது அப்படத்தின் அஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தேவரா படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vettaiyan OTT Release Date

தேவரா படத்துக்கு போட்டியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படமும் அன்றைய தினமே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. வேட்டையன் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 8-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. த.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மெய்யழகன் vs தேவரா vs லப்பர் பந்து! தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

Latest Videos

click me!