மூன்றே மணிநேரம்; 3 படங்களுக்கு 21 டியூன் போட்டு மிரட்டிய இளையராஜா - என்னென்ன படங்கள் தெரியுமா?

First Published | Nov 5, 2024, 4:46 PM IST

Ilayaraja : இன்றைய சூழலில் ஒரு பாடலுக்கு டியூன் போடவே பல நாள் தேவைப்படும் நிலையில், 3 தமிழ் படங்களில் உள்ள 21 படங்களுக்கு 3 மணிநேரத்தில் டியூன் போட்டுள்ளார் இளையராஜா.

Ilayaraja

தமிழ் திரையுலகை பொறுத்தவரை கடந்த 48 ஆண்டுகளாக மிகச் சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இளையராஜா. இந்திய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில், சுமார் 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து ஐந்து முறை தேசிய விருது பெற்ற மாபெரும் இசை கலைஞராக அவர் திகழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் உலக அளவில் 20,000திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளை அவர் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த இசை மேதை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரை உலகில் இன்றளவும் மிகப்பெரிய புகழோடும், திறமையோடும் வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் தான் இளையராஜா என்றால் அது மிகையல்ல. ஒரு திரைப்படத்திற்கான பாடலை உருவாக்கும் பொழுது அதற்காக அவர் மேற்கொள்ளும் சிரத்தையே இன்றளவும் அவரை மிகப்பெரிய இசை கலைஞராக உருமாற்றி இருக்கிறது என்றே கூறலாம்.

வறுமையில் இருந்த வாலி; நாகேஷ் வாங்கி கொடுத்த பேப்பரால் லட்சாதிபதி ஆன கதை தெரியுமா?

Music Director Ilayaraja

இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடலை அமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் காலத்தில், 1980களின் தொடக்கத்தில், அதாவது இளையராஜா மிக மிக பிஸியான இசையமைப்பாளராக இருந்து வந்த நேரத்தில் ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அந்த வகையில் ஒரு நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை, வெறும் 3 மணி நேரத்தில் 3 வெவ்வேறு திரைப்படங்களுக்கு மொத்தம் 21 பாடல்களுக்கான டியூனை அமைத்து மூன்று இயக்குனர்களையும் மிரட்டி விட்டிருக்கிறார் இளையராஜா என்றால் அது மிகை அல்ல. அந்த சுவாரசியமான சம்பவம் குறித்த விஷயத்தை இப்போது பார்க்கலாம். கடந்த 1991 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியானது தான் இயக்குனர் கேஆரின் "ஈரமான ரோஜாவே" என்கின்ற திரைப்படம்.

Tap to resize

Ilayaraja Songs

பிரபல நடிகை மோகினி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். நடிகர் சிவசுப்பிரமணியம் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை பொருத்தவரை பெரிய அளவில் நடிகர் நடிகைகள் இல்லாத நிலையிலும் கூட, இந்த படம் மெகா ஹிட் ஆனது. காரணம் இந்த திரைப்படத்தில் ஒலித்த ஏழு பாடல்கள் தான். "அதோ மேக ஊர்வலம்", "கலகலக்கும் மணியோசை", "தென்றல் காற்றே வா வா" போன்ற பாடல்கள் காலம் கடந்து இன்றும் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 

இயக்குனர் கே.ஆர் அவர்களை ஒரு நாள் காலை இளையராஜா அழைக்க, அவரும் அங்கு சென்று இருக்கிறார். அப்பொழுது காலை 6 மணி கே.ஆர் இளையராஜாவை சந்திக்க சென்ற வெகு சில நிமிடங்களில் அப்படத்தின் ஏழு பாடல்களுக்கான இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

Ilayaraja Music

அது மட்டுமல்ல ஏற்கனவே அந்த இடத்திற்கு பிரபல இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் ஆகிய இருவரையும் வரச் சொல்லி இருந்தாராம் இளையராஜா. காரணம் அவர்களுடைய திரைப்படத்திற்கான இசையும் அன்றை தினமே முடிப்பதாக இருந்தது. இந்த சூழலில் "ஈரமான ரோஜாவே" படத்தின் பாடல்களை அமைத்து முடித்த பிறகு, மூன்று மணி நேரத்திற்குள் பிரதாப் போத்தனின் "மை டியர் மார்த்தாண்டன்" மற்றும் இயக்குனர் பாரதிராஜாவின் "நாடோடித் தென்றல்" உள்ளிட்ட படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ஆக மொத்தம் 3 மணி நேரத்தில் மூன்று படங்களுக்கு 21 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அவர்.

சரிகமப நிகழ்ச்சியில் நடுவர்களை மெய்மறக்க வைத்த அரசு பள்ளி மாணவியின் குரல்! யார் இவர்.?

Latest Videos

click me!