முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் முகுந்தின் சாதியை காண்பிக்காததன் காரணம் குறித்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் ஒன்று 'அமரன்'. இப்படம் தமிழகத்தை சேர்ந்த, ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில், ஏன் முகுந்த் வரதராஜன் சாதி குறித்த தகவல்கள் இடம்பெற வில்லை என, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பி வந்த நிலையில்... இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பேசியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
25
Amaran Movie Box Office
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெளியாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இதுவரை சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க, இந்த படத்தை... நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில், ஒரு தரப்பினர் ஏன் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் முகுந்த் வரதராஜன் என்கிற உண்மை படத்தில் மறைக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
45
Rajkumar Periyasamy about Amaran Movie
இந்நிலையில், 'அமரன்' திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டமாக நடந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இதற்கான விளக்கத்தை கொடுத்துளளார். முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் எங்களிடம் முகுந்த்தை எந்த ஒரு சாதி அடையாளமும் இல்லாமல், ஒரு தமிழராக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். முகுந்த் வரதராஜனை முழுக்க முழுக்க தமிழ் சாயல் கொண்ட நடிகர் ஒருவரை மட்டுமே, பயன்படுத்துங்கள் என்று கேட்டு கொண்டது தான் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க காரணமாகவும் அமைந்தது என தெரிவித்தார்.
அதே போல் முகுந்த் தன்னை எந்த ஒரு சாதி ரீதியாகவும் காட்டிக்கொள்ளாமல் இந்தியன் என்று தான் முன்னிலைப்படுத்தியுள்ளார் என்றும், அதனால் தான் அவரது சமூகம் குறித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் கூறினார்.மேலும் இது முகுந்த் வரதராஜனை கொண்டாட வேண்டிய படம்... எனவே அவரை சாதி ரீதியாக பிரித்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு, சாதி ரீதியாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பளார் பதிலடியாக அமைத்துள்ளது.