கங்குவா மட்டுமல்ல சூர்யா 44 படமும் ரிலீஸுக்கு ரெடி! எப்போ திரைக்கு வருது தெரியுமா?

First Published | Nov 6, 2024, 10:45 AM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள சூர்யா 44 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்த்துள்ளது.

Kanguva Suriya

சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Suriya 44

கங்குவா படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் சூர்யா. கங்குவா மட்டுமின்றி நடிகர் சூர்யா மற்றொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... லோகேஷ் கண்டிப்பா அதை செய்யமாட்டார்; Rolex திரைப்படம் பற்றிய கேள்வி - மனம் திறந்த சூர்யா!

Tap to resize

suriya 44 movie Update

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமான், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாகவே சூர்யா 44 உருவாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதியாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. அதன்படி சூர்யா 44 படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

Suriya 44 movie release date

அதுவும் மார்ச் மாதமே சூர்யா 44 படத்தை வெளியிட உள்ளார்களாம். மார்ச் 28-ந் தேதி அப்படத்தை ரிலீஸ் செய்யும் ஐடியாவில் உள்ளதாம் படக்குழு. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சூர்யா படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களின் காத்திருப்புக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக கங்குவா மற்றும் சூர்யா 44 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் அன்பான ஃபேன்ஸ் செம்ம குஷியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பாலிவுட் பயணம் குறித்த கேள்வி; நச்சுனு ஓப்பனாக பதில் சொன்ன சூர்யா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Latest Videos

click me!