
சீரியல் நடிகை ஆலியா மானசா, கடந்த ஆண்டு பிரமாண்ட வில்லா ஒன்றை கட்டி முடித்த நிலையில் இதைத்தொடர்ந்து, இரண்டு கோடி மதிப்பில் சொகுசு கப்பல் ஒன்றையும் கடந்த மாதம் தான் வாங்கியதாக தகவல் வெளியானது. தற்போது ஆல்யா மானசா தன்னுடைய கணவருக்கும் பிடித்த, சொகுசு காரை வாங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சின்னத்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்த நட்சத்திர ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆல்யா மானசா பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். இந்த சீரியலில் இவர் ஏற்று நடித்த செம்பா என்கிற கதாபாத்திரம், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து அந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவையே காதலித்து வந்த ஆல்யா மானசா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில்... 2019 ஆம் ஆண்டு, பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டார்.
டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை அறிவிக்க - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அறிவித்த விஜய் சேதுபதி! புரோமோ
ஆரம்பத்தில் ஆல்யா பெற்றோர் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பின்னர் ஏற்று கொண்டனர். அதே போல் ஆல்யா மானஸாவுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவது அவருடைய மாமியார் தான். திருமணம் ஆன சில மாதங்களையே ஐலா என்கிற பெண் குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா, மகள் பிறந்த ஒரே வருடத்தில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி 2' என்கிற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மீண்டும் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமானதாக அறிவித்தார். ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் போது, மீண்டும் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகினார்.
இரண்டாவதாக மகன் பிறந்த நிலையில், குழந்தை பெற்றுக் கொண்ட 6 மாதத்திலேயே மீண்டும் ஆல்யா மானசா நடிக்கும் சீரியல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இவர் சன் டிவியில் 'இனியா' என்கிற தொடரில் நடித்தார். இனியா சீரியல் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஆல்யா மானசா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
புஷ்பா 2 OTT ரிலீஸ்; எந்த ஓடிடி தளத்தில் - எப்போது வெளியாகிறது தெரியுமா?
ஆல்யா மானசாவின் கணவரும், நடிகருமான சஞ்சீவ் தற்போது சன் டிவியில் TRP-யில் பொளந்து கட்டிக் கொண்டிருக்கும் 'கயல்' சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சின்னத்திரையை பொருத்தவரை ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவருமே அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களாக உள்ளனர். குறிப்பாக ஆல்யா மானசா ஒரு நாளைக்கு 50,000 வீதம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு நிராகராகவே சஞ்சீவும் பெறுகிறார். திருமணம் செய்து கொண்ட பின்னர் தன்னுடைய முதல் வீட்டை வாங்கிய ஆல்யா மானசா அதன் பின்னர் தன்னுடைய கனவை இல்லம் ஒன்றை கட்டி முடித்தார். பல சொகுசு வசதிகள் நிறைந்த இந்த வீட்டை கட்டி முடிக்க சுமார் 2 கோடி செலவு ஆனதாக கூறப்பட்டது. இதனை அவர்களே தங்களுடைய ஹோம் டூரில் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆல்யா மானசா ஜோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் ஒன்றை சொந்தமாக வாங்கியதாக தகவல் வெளியானது. இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடி இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இந்த போட் ஹவுஸை விருந்தினர்களுக்கு வாடகை வாடகைக்கு விட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த போட் ஹவுசில், மினி பார்ட்டி கொண்டாடும் வகையில் சில வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சொகுசு கப்பல் வாங்கிய ஒரே மாதத்தில், தற்போது தன்னுடைய கணவருக்கு பிடித்த சொகுசு Mercedes-Benz காரை வாங்கியுள்ளார் ஆல்யா மானசா. இதன் மதிப்பு 80 லட்சம் முதல் 1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் வில்லனாக காமெடி நடிகர்! இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாடீங்க!