Allu Arjun Starring Pushpa 2
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு படமும் இவ்வளவு குறுகிய நாட்களில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வணிக ரீதியாக வசூல் செய்ததில்லை, என்கிற பெருமையை 'புஷ்பா 2' திரைப்படம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், ‘புஷ்பா 2’ OTTயில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
Pushpa 2: The Rule Release in Netflix
இது ஒருபுறம் இருக்க, தாப்ரோது கிடைத்துள்ள தகவலின்படி, Netflix OTT நிறுவனம் தான் 'புஷ்பா 2' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ₹250 கோடிக்கு வாங்கியுள்ளதாம். OTT நிர்வாகம் , தங்கள் முதலீட்டை மீட்டெடுக்க, படத்தை விரைவில் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே இந்த மாத இறுதியில், புஷ்பா 2 Netflixல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம். இந்த தகவல் ஓடிடி ரசிகர்களையும், மீண்டும் ஒருமுறை புஷ்பா 2 படத்தை பார்க்க காத்திருக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Pushpa 2 Movie Hindi Collection
இன்னும் சில ஊடகங்களில், ஜனவரி 31 ஆம் தேதி Netflixல் புஷ்பா 2 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அடுத்த இரண்டு வாரங்களில் இப்படம் செய்யும் வசூலை பொறுத்து ஓடிடி வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக ஹிந்தியில் 'புஷ்பா 2' படத்திற்கு யாரும் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இதுவரை பாலிவுட் திரையுலகில் வெளியாகி சுமார் ரூ.750 கோடிக்கும் மேல் வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்கிற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இதுவரை ஹிந்தியில் வெளியான எந்த ஒரு தென்னிந்திய மொழி திரைப்படமும், இந்த அளவுக்கு வசூல் செய்ததில்லை.
சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் வில்லனாக காமெடி நடிகர்! இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாடீங்க!
Pushpa 2 Ott Release
மேலும், புஷ்பா முதல் பாகம் ஜப்பான் மற்றும் சீனாவின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், புஷ்பா 2 திரைப்படத்தையும் டப்பிங் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் மிப்பெரிய வசூல் தொகையுடன்... மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தாலும், இந்த சந்தோஷத்தை சந்தியா தியேட்டர் சர்ச்சையால் அனுபவிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.