'சிந்து பைரவி' சீரியல் துவங்கும் முன்பே ஜூட் விட்ட ரவீனா தாஹா! வில்லியை ஹீரோயினாக்கிய விஜய் டிவி!

First Published | Jan 5, 2025, 11:29 AM IST

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருந்த, 'சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்' சீரியலில் ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க இருந்த ரவீனா தாஹா அதிரடியாக சீரியலில் வெளியேறி உள்ளார்.
 

Vijay TV Serial

விஜய் டிவியில் அடுத்தடுத்து பழைய சீரியல்கள் முடிவுக்கு வரும் நிலையில், புதிய சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் 'சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்' என்கிற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக, ப்ரோமோ வெளியானது. இது இரண்டு ஏட்டிக்கு போட்டியான ஜோடிகள் வாழ்க்கையில் இணைந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். 

Sindhu Bairavi Kacheri Arambam

கூடிய விரைவில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில,  தற்போது இந்த சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்த ரவீனா தாஹா வெளியேறி உள்ளார். மேலும் இவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'வீட்டுக்கு வீடு வாசப்படி' சீரியலில் பயங்கர வில்லியாக நடித்து மிரட்டி வரும் ஆர்த்தி சுபாஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் வில்லனாக காமெடி நடிகர்! இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாடீங்க!

Tap to resize

Dhiraviam and Ananda Krishna Male Lead

மேலும் இந்த சீரியலில், ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே', 'வீட்டுக்கு வீடு வாசப்படி' போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான திரவியம் ராஜ்குமரன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பவித்ரா பி நாயக் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோவாக விஜய் டிவியில் கடந்தாண்டு முடிவுக்கு வந்த 'செல்லம்மா' சீரியலில் அக்ஷிதாவின் கணவராக நடித்த வில்லன் நடிகர் ஆனந்த கிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சில திரைப்படங்களிலும் நடித்த பிரபலமானவர்.

Raveena Daha and Pavithra B Naik Female Lead

'சிந்து பைரவி' தொடர் மூலம் விஜய் டிவியில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவருக்கு ஜோடியாக தான் ரவீனா தாஹா நடிக்க இருந்தது. தற்போது ரவீனா வெளியேறி உள்ளதால், ஆர்த்தி சுபாஷ் இந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டிப்போட்டியாக இருக்கும் இந்த ஜோடிகள் இடையே நடக்கும் காதல் திருமணத்தில் முடிந்தால்... என்னவெல்லாம் நடக்கும் என புதுமையான கதைக்களத்தோடு இயக்கி உள்ளார் இயக்குனர். சமீபத்தில் தான், விஜய் டிவியில் எதிர்நீச்சல் மதுமிதா நடிக்க உள்ள 'அய்யனார் துணை' சீரியலின் ப்ரோமோ வெளியாகி சீரியல் மீதான ஆர்வத்தை தூண்டிய நிலையில், இந்த தொடரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைல்டு கார்டு போட்டியாளராக வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய மஞ்சரி - ராணவ்!

Aarthi Subhash Replaced Raveena daha Role

ரவீனா தாஹா ஏற்கனவே, விஜய் டிவியில் 'மௌன ராகம் 2' தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இதன் பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புக்கு காத்திருந்த ரவீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மீண்டும் சீரியல் பக்கம் சாய்ந்தார். ஆனால் திடீர் என 'சிந்து பைரவி' சீரியல் ஒளிபரப்பாகும் முன்னரே இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!