
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடத்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் நாளே மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடத் துவங்கினர். இவர்கள் இருந்து முதல் 24 மணி நேரத்திலேயே 'மகாராஜா' படத்தில் நடித்த சாச்சனா நேமிதாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட நிலையில், பின்னர் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார்.
அதேபோல் இந்த முறை வைல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே வந்த ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் தான் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்னர் ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சாச்சனா, சத்தியா, சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், சிவக்குமார், ஆகியோர் வெளியேறி உள்ள நிலையில்... மீதம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல தொடர்ந்து போராடி வருகின்றனர்.
டைட்டில் வின்னராகும் கனவோடு இருந்த இருவரை கண்ணீரோடு வெளியே அனுப்பிய பிக் பாஸ்!
அந்த வகையில் டாப் 8 கண்டெஸ்டெண்ட் லிஸ்டில், தீபக், பவித்ரா, விஜய் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் மற்றும் ராயன் ஆகியோர் உள்ளனர். பிக் பாஸ் முடிவடைய இன்னும் 2 வாரமே உள்ளதால் இந்த வாரமும் போட்டியாளர்களுக்குள் கடுமையான டாஸ்க்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் இந்த முறை டிக்கெட் டூ பினாலே டாஸ்க் மூலம் யாரும் எதிர்பாராத போட்டியாளரான ராயன் பிக் பாஸ் முதல் பைனல் லிஸ்ட்டாக நுழைந்துவிட்டார். மற்ற 7 போட்டியாளர்களின் யார் யார் பைலுக்குள் செல்வார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, ராணவ் மற்றும் மஞ்சரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சிங்கிள் மதராக இருந்து, தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்தை காப்பாற்றி வரும் மஞ்சரி ஒரு பேச்சாளராக பிரபலமானவர். மேலும் இஞ்சினியரிங் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்த்த மஞ்சரிக்கு பேச்சாளர் என்கிற அடையாளமே, இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பை பெற்று தந்தது. வைல்டு கார்ட் போட்டியாளராக நவம்பர் மூன்றாம் தேதி உள்ளே வந்த மஞ்சரி, தொடர்ந்து தன்னுடைய திறமையான விளையாட்டை வெளிப்படுத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று வெளியேறி உள்ளார். இவர் ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படும் நிலையில், 63 நாட்களுக்கு 10 முதல் 12 லட்சத்திற்குள் சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
சிம்பு என் படத்தை நாசமாக்கிவிட்டார்; அவரால் நடுத்தெருவுல நிக்குறேன் - இயக்குனர் ஆவேசம்
அதேபோல் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்துவிட்டு, ஹீரோவாக வேண்டும் என்கிற கனவோடு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் தான் ராணவ், இவரும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நிலையில், இவருக்கு சம்பளமாக 20 முதல் 22 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. இவர் 12 முதல் 15 லட்சத்திற்குள் சம்பளமாக பெற்றுவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் லேட்டாக வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு தான் இருவரும் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.