பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் முடிவில் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமான 7 சீசன்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். தற்போது நடைபெற்று வரும் 8-வது சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகியதால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். இந்நிகழ்ச்சி தற்போது 90 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
25
Bigg Boss Eviction
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து பைனலுக்குள் நுழைந்து முதல் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு 50 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பிக் பாஸ் டைட்டில் வழங்கப்படும். இந்த சீசனில் தற்போது 10 போட்டியாளர்கள் பைனலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதில் இந்த வாரம் முழுக்க நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார் ரயான். அவருக்கு அடுத்தபடியாக முத்துக்குமரன் அந்த டாஸ்கில் இரண்டாம் இடம்பிடித்திருக்கிறார்.
35
Bigg Boss Double Eviction
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சத்யா - ஆர்.ஜே.ஆனந்தி, தர்ஷிகா - ரஞ்சித், ஜெஃப்ரி - அன்ஷிதா ஆகியோர் கடந்த மூன்று வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் மஞ்சரி, ராணவ், ரயான், அருண், விஷால், ஜாக்குலின், பவித்ரா, தீபக் ஆகிய 8 பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் தீபக், அருண், விஷால், ரயான் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்றதால் எலிமினேஷனில் இருந்து தப்பினர்.
அதேபோல் மஞ்சரி, பவித்ரா, ஜாக்குலின் ஆகியோர் கம்மியான வாக்குகளை பெற்றிருந்ததால் இவர்களில் இருந்து இருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ராணவ் மற்றும் மஞ்சரியை எலிமினேட் செய்து ட்விஸ்ட் கொடுத்துள்ளார் பிக் பாஸ். இவர்கள் இருவருமே வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர்கள். இந்த சீசனில் மொத்தம் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்தனர். அவர்களில் 5 பேர் எலிமினேட் ஆகிவிட்டனர். இன்னும் ரயான் மட்டுமே அதில் எஞ்சி இருக்கிறார்.
55
Manjari Eliminated
பிக் பாஸ் சீசன் 8 டைட்டிலை ஜெயிக்கும் கனவோடு இருந்த மஞ்சரி மற்றும் ராணவ் ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகி இருப்பது இருவருக்குமே பேரதிர்ச்சியாக உள்ளது. அதிலும் ராணவ், தான் கப்பு ஜெயிப்பேன் என்று கனவோடு இருந்தார். ஏனெனில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் ARM என்கிற எழுத்துப்படி தான் வெற்றியாளர்கள் இருந்தனர். கடந்த சீசனில் அர்ச்சனா வென்றதால் இந்த சீசனில் R என்கிற எழுத்துடைய போட்டியாளர் தான் வெற்றிபெறுவார் என்கிற நம்பிக்கையில் இருந்த ராணவ்வின் கனவு நனவாகாமல் போய்விட்டது.