Actors Bharat and Shaam are both struggling for Movie Chance : சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியான நடிகராக நடித்த நடிகர்கள் கூட இப்போது வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நடிகர்கள் பரத் மற்றும் ஷாம். தமிழ் சினிமாவே இப்போது மாஸ் ஹீரோக்களை நம்பி தான் இருக்கிறது. 4, 5 ஹீரோக்களை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மற்ற நடிகர்கள் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு பிறகு வந்த விஜய், அஜித், சூர்யா ஆகியோர் சினிமாவில் இன்றும் காலூன்றி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் சினிமாவில் கால் பதித்த நடிகர் ஷாமுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. குஷி படத்தில் நடித்த ஷாமுக்கு 12பி படம் ஹீரோவாக அறிமுகம் செய்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா, அன்பே அன்பே, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, காவியன், பொய்க்கால் குதிரை, வாரிசு என்று பல படங்களில் நடித்தார்.