அப்செட்டில் உள்ள அஜித் ரசிகர்களை ஆறுதல் படுத்த வரும் விடாமுயற்சி அப்டேட்

Published : Jan 04, 2025, 01:09 PM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளிவர உள்ளதாம், அது என்ன அப்டேட் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
14
அப்செட்டில் உள்ள அஜித் ரசிகர்களை ஆறுதல் படுத்த வரும் விடாமுயற்சி அப்டேட்
Ajithkumar

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. அப்படம் கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது. அப்படம் ரிலீஸ் ஆகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன்பின் அஜித் நடித்த ஒரு படம் கூட தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. அதிலும் அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால், அதை ரசிகர்கள் மலைபோல் நம்பி இருந்தனர்.

24
Ajith Kumar, Trisha

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. அஜித் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதால் அதற்கு பதிலாக அரை டஜன் படங்கள் களமிறங்கி உள்ளன. இதனால் பொங்கல் ரேஸ் சூடுபிடித்துள்ளது. மறுபுறம் அஜித் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். 2 வருடங்களாக ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாததால் கடும் வருத்தத்தில் உள்ள ரசிகர்களை திருப்தி படுத்த விடாமுயற்சி படக்குழு முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்... வில்லங்கத்தில் சிக்கிய விடாமுயற்சி; பொங்கல் ரேஸில் இருந்த ஜகா வாங்க காரணம் இதுதானா?

34
Vidaamuyarchi Update

இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டதால், அதை பொங்கல் விருந்தாக வெளியிட முடிவெடுத்துள்ளதாம் படக்குழு. படம் ரிலீஸ் ஆகாத அப்செட்டில் இருக்கும் ரசிகர்களை ஆறுதல் படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார்களாம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளது.

44
Vidaamuyarchi Issue

விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்காததால் தான் தற்போது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கிறது. இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க ஒருபுறம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதில் உடன்பாடு எட்டப்பட்டால் விடாமுயற்சி திரைப்படம் வருகிற ஜனவரி 26-ந் தேதியோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித்தால் தனுஷின் இட்லி கடைக்கு வந்த சிக்கல்!

click me!

Recommended Stories