சிம்பு என் படத்தை நாசமாக்கிவிட்டார்; அவரால் நடுத்தெருவுல நிக்குறேன் - இயக்குனர் ஆவேசம்

First Published | Jan 4, 2025, 12:32 PM IST

சிம்பு நடித்து டிராப் ஆன கெட்டவன் படத்தை இயக்கிய இயக்குனர் ஜிடி நந்து, அவரால் தான் நடுத்தெருவில் நிற்பதாக பேட்டி ஒன்றில் புலம்பி இருக்கிறார்.

Silambarasan

சிம்பு என்றாலே வம்பு என சொல்லும் அளவுக்கு அவர் சிக்கிய சர்ச்சைகள் ஏராளம். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு ஏராளமான படங்கள் டிராப் செய்யப்பட்டு இருக்கின்றன. அப்படி சிம்பு நடித்து டிராப் ஆன படம் தான் கெட்டவன். இப்படத்திற்காக நீண்ட முடியுடன் வித்யாசமான கெட்டப்பில் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தன. ஆனால் இயக்குனர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அப்படத்தை பாதியிலேயே கைவிட்டார் சிம்பு.

Simbu, GT Nandhu

இந்நிலையில் சிம்புவின் கெட்டவன் படத்தை இயக்கிய ஜிடி நந்து என்பவர் சிம்புவால் தான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசி உள்ளார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் அதில் கூறியதாவது : “கெட்டவன் திரைப்படம் டிராப் ஆன பின்னர் சிம்புவிடம் இருந்து நல்ல செய்தி வரும் என காத்திருந்தேன். கெட்டவன் படம் எடுத்தபோது தான் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்திருந்தது. அப்போது சிம்பு எனக்கு 50 ஆயிரம் கொடுத்தார். அது மருத்துவ செலவுக்கு உதவியாக இருந்தது. அதைப் பற்றி நானே பல பேட்டிகளில் பெருமையாக கூறி இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்... வெற்றிமாறன் - கவுதம் மேனன் காம்போவில் ஒரு சிம்பு படம்! இதென்ன புது ட்விஸ்டா இருக்கு!

Tap to resize

Actor Simbu

தொடர்ந்து பேசிய அவர், சிம்பு உதவி செய்ததற்கு ஒரு வாரத்திற்கு பின்னர் எனக்கு போன் செய்தார். அப்போது கெட்டவன் படத்தின் கிளைமாக்ஸில் வரும் வசனம் பற்றி என்னிடம் கேட்டார். எதற்கு என நான் கேட்டேன். அப்போது தான் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்கு அந்த டயலாக் தேவைப்படுகிறது. அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது என கூறினார். உடனே நானும் எனக்கு உதவியெல்லாம் செய்திருக்கிறாரே என்பதற்காக அந்த வசனத்தை கூறினேன்.

Kettavan Movie

அந்த வசனம் கெட்டவன் படத்துக்கு தான் கரெக்ட் ஆக இருக்கும். ஏனெனில் இந்த படத்தின் முழு சாராம்சத்தையும் கொண்ட வசனமாக அது இருக்கிறது என்பதையும் சிம்புவிடம் எடுத்துக் கூறினேன். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், அந்த வசனத்தை அப்படியே ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் வைத்து அதை நாசமாக்கிவிட்டார். கெட்டவன் பட கதையை மொத்தமாக திருடி படம் எடுத்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் எனக்கு உதவுவது போல் வந்து என் படத்தின் வசனத்தை அவர் தூக்கிச் சென்றது ஆதங்கமா இருக்கு. இப்போ நான் நடுத்தெருவுல இருக்கேன்” என ஜிடி நந்து பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் முதல் சிம்பு வரை; ரியல் லைப் மன்மதனாக வலம் வந்த நடிகர்கள்!

Latest Videos

click me!