Kiran Rathod Talk About Thalapathy Vijay's Ghilli Movie Trisha Role : ஜெமினி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை கிரண். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவே தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். அப்படி அவர் நடித்த படம் தான் வில்லன். அஜித்துக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, தென்னவன் ஆகிய படங்களில் நடித்தார்.
எனினும் ஒரு சில படங்கள் தோல்வியை கொடுக்கவே விஜய்யின் திருமலை படத்தில் வரும் வாடியம்மா சக்கம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் வாய்ப்பு வந்தது. நியூ, ஜின்னா, திமிரு, இது காதல் வரும் பருவம், வசூல், ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, இளமை ஊஞ்சல் என்று தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வலம் வந்தார்.