ilaiyaraaja
இசையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. தற்போது அவருக்கு வயது 80ஐ கடந்துவிட்டாலும் இந்த வயதிலும் டிரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். உதாரணத்துக்கு கடந்த ஆண்டு பல வெற்றிப்பாடல்களை அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் கொடுத்தாலும் அதிகம் கொண்டாடப்பட்டது இளையராஜா பாடல்கள் தான். இது யாரும் மறுக்க முடியாத உண்மை.
Isaignani Ilaiyaraaja
ஏனெனில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு உயிர்நாடியாக இருந்தது இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் பாடல் தான். அதேபோல் லப்பர் பந்து படத்தில் தினேஷை கெத்தாக காட்டியது இளையராஜாவின் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் பாடல் தான். இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் பூசும்’ பாடல், மெய்யழகன் படத்தில் இடம்பெற்ற ‘இந்த மான்’ பாடல் என பெரும்பாலான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இளையராஜா பாடல்கள் தான் தூக்கி நிறுத்தின.
இதையும் படியுங்கள்... இளையராஜா அதிவேகமாக கம்போஸ் செய்த எவர்கிரீன் ஹிட் பாடல், வெறும் 5 நிமிஷம் தான் ஆச்சாம்!
Ilaiyaraaja Song Secret
இத்தகைய பெருமை மிகு இசையமைப்பாளரான இளையராஜா, கமல் படத்துக்காக இசையமைத்த ஒரு பாடல் ஒலிம்பிக்கில் ஒலித்த அபூர்வ நிகழ்வு பற்றி பார்க்கலாம். அதன்படி கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் தான் ஒங்கப்பண்டா’ என்கிற பாடல் தான் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது ஓப்பனிங் பாடலாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் ஒலிக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்கிற பெருமையையும் அப்பாடல் பெற்றிருந்தது.
Ram Lakshman
இப்பாடல் இடம்பெற்ற ராம் லட்சுமண் படத்தில் கமல்ஹாசன் ஒரு யானையுடன் நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் வல்லவர்களான தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து இருந்தது. இப்படத்தை தியாகராஜன் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும், இப்படத்தின் பாடல் லண்டன் ஒலிம்பிக்கில் ஒலிக்கப்பட்டது காலம் கடந்து கொண்டாடப்படும் நிகழ்வாக உள்ளது.
இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்! ஒரு ஓட்டில் தேசிய விருதை ரகுமானிடம் பறிகொடுத்த இளையராஜா!