பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடந்து முடிந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் விதிமீறலில் ஈடுபட்ட போட்டியாளரை குறும்படம் போட்டு செம டோஸ் கொடுக்க உள்ளாராம் விஜய் சேதுபதி.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரயான், மஞ்சரி, ஜாக்குலின், முத்துக்குமரன், அருண், செளந்தர்யா, விஷால், பவித்ரா, ராணவ், தீபக் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர்களுக்கு இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வைக்கப்பட்டது. மொத்தம் நடைபெற்ற 10 டாஸ்குகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற போட்டியாளர் நேரடியாக பைனலுக்குள் நுழைவார்.
24
Bigg Boss Ticket To Finale Task
இதில் 8 டாஸ்குகளின் முடிவில் ரயான் தான் 16 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். இதற்கு அடுத்தபடியாக 11 புள்ளிகளுடன் முத்துக்குமரன் மற்றும் மஞ்சரி உள்ளனர். எஞ்சியுள்ள 2 டாஸ்குகளின் முடிவுகளை சீக்ரெட்டாக வைத்திருக்கிறார் பிக் பாஸ். அதில் யாருக்கு எவ்வளவு புள்ளிகள் கிடைத்துள்ளது என்பதை பொறுத்தே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். ஆனால் அந்த எஞ்சிய இரண்டு டாஸ்குகளிலும் ரயான் வெற்றிபெற்றுள்ளதால் அவர் தான் டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று நடைபெறும் வீக்கெண்ட் எபிசோடில் டிக்கெட் டூ பினாலே டாஸ்குக்கான வின்னரை அறிவிக்க உள்ளார். அதுமட்டுமின்றி இன்றைய எபிசோடில் குறும்படமும் போடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்கெட் டூ பினாலேவில் நடைபெற்ற ஜார் டாஸ்கில் ரயான் விதிமீறி விளையாடி வென்றுள்ளது நிரூபனம் ஆகி உள்ள நிலையில், அவருக்கு இந்த வாரம் குறும்படம் போட்டு செம டோஸ் கொடுக்கப்போகிறாராம் விஜய் சேதுபதி.
44
Kurumpadam for Rayan in Bigg Boss
ஜார் டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் கையில் உள்ள கம்பை மட்டுமே பிடித்தபடி நடக்க வேண்டும். மேலே இருக்கும் கண்ணாடி ஜார் கீழே விழாமல் நடப்பதே டாஸ்க். அதில் ரயான், தனது கண்ணாடி ஜார் கீழே விழ இருந்த நிலையில், யாரும் பார்க்காத நேரத்தில் அதை தன் கையால் அட்ஜஸ்ட் செய்துவிட்டு நடந்து அந்த டாஸ்கில் இரண்டாம் இடம்பிடித்தார். இதற்காக அவருக்கு 4 புள்ளிகளும் வழங்கப்பட்டன. ரயான் கோல்மால் பண்ணி வாங்கிய அந்த 4 புள்ளிகள் பறிக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனால் இன்றைய வீக்கெண்ட் எபிசோடில் ரயானுக்கு செம டோஸ் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.