
தேனி பெரியகுளத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் சிங்கம்புலி பெங்களூரு சென்று இன்ஜினியரிங் படிப்பு படித்துள்ளார். அதன் பிறகு படம் எடுக்கும் ஆசையில் சென்னை வந்த அவர் சுந்தர் சியிடம் அசிஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அப்போது தான் உன்னை தேடி என்ற படத்தைப் பற்றி சுந்தர் சியிடம் கூற அவரும் அதை வைத்து ஒரு வாரத்திலேயே திரைக்கதை எழுதி அஜித்தை வைத்து அந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இதே போன்று கார்த்திக், மனோரமா, கவுண்டமணி, மந்த்ரா, திவ்யா உன்னி ஆகியோர் பலர் நடித்த கண்ணன் வருவான் படத்திலும் சிங்கம்புலி இயக்குநர் சுந்தர் சிக்கு அசிஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அப்போது அவர் சொன்ன கதை தான் கண்ணன் வருவான். ரசிகர்களை வியக்க வைத்த இந்தப் படம் சிங்கம்புலியை அடுத்து இயக்குநராக மாற்றியது.
அஜித்தை வைத்து அவர் இயக்கிய முதல் படம் ரெட். படம் மட்டுமல்லாமல் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மதுரையை சுற்றி நடக்கும் கதைகளை இந்தப் படம் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து பிரியா கில், மணிவண்ணன், ரகுவரன், ரேவதி, இளவரசு, நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. அதற்கு படத்தில் இடம் பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி, ரெட் ரெட், ரோஜா காத்து, தாய் மடியே என்று எல்லா பாடல்களும் ஒரு காரணம். ரெட் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு சூர்யாவை வைத்து மாயாவி படத்தை இயக்கினார். ஆனால், இந்தப் படம் நினைத்தபடி ஹிட் கொடுக்கவில்லை.
இதையடுத்து அவர் படங்கள் இயக்கவில்லை. மாறாக சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும், வில்லன் ரோல்களிலும் நடித்து வந்தார். எப்படி சிங்கம்புலிக்கு மாயாண்டி குடும்பத்தார் படம் ஹிட் கொடுத்ததோ அதே போன்று கடந்த ஆண்டு திரைக்கு வந்த விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் நல்ல வரவேற்பு கொடுத்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவ்வளவு ஏன், சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு என்ற ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சூரிக்கு நான் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தேன் என்று பேசியுள்ளார். கண்ணன் வருவான் சுந்தர் சி இயக்கிய படம். இந்தப் படத்தில் நான் தான் அசிஸ்டண்ட் இயக்குநர். கதை, வசனம் எல்லாம் எழுதினேன்.
அப்போது இந்தப் படத்தில் டெக்னீசியனாக வேலை பார்க்க சூரி வந்தாரு. நான் தான் கவுண்டமணியிடம் அவரை பற்றி சொல்லி அவருடன் நடிக்க வைத்தேன். எங்க ஊரு பையன் என்றெல்லாம் சொன்னேன். இப்போது சூரி இந்த நிலைமைக்கு வந்த பிறகும் கூட அதைப் பற்றி பல பேட்டிகளில் கூறி வருகிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரது நடிப்பில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி விடுதலை பார்ட் 2 வெளியானது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சூரி இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நான் ஃபேன் பாயாக வேலை பார்த்திருக்கிறேன். இருக்கும் 100 இயக்குநர்களில் எப்படியும் 90 இயக்குநர்களிடம் நான் வேலை பார்த்திருப்பேன். இவ்வளவு ஏன் படையப்பா படத்தில் கூட நான் லைட் மேனாக வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறி கேஎஸ் ரவிக்குமாரை அதிர்ச்சியடைச் செய்தார்.
அப்போது அப்படியெல்லாம் கஷ்டப்பட்ட சூரி இன்று ஒட்டு மொத்த சினிமாவும் கொண்டாடும் ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் காமெடி நடிகராக வலம் வந்த சூரி இன்று ஒரு ஹீரோவாக வளர்ச்சி அடைந்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறனாக கூட இருந்தாலும் சூரியின் கடின உழைப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
விடுதலை, கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய படங்கள் சூரியை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டியது. மறு மலர்ச்சி படம் மூலமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சூரி இப்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்திலும் மாமன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த 2 படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.