51 வயதில் மலாய்கா அரோரா ஒல்லியான தேகத்துடனும், கவர்ச்சிகரமான சருமத்துடனும் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திழுத்து வருகிறார். தன்னுடைய அழகை தக்க வைத்து கொள்ள மலாய்கா அரோரோ பின்பற்றுவது ஒரே ஒரு டயட் பிளான் பற்றி பார்ப்போம்.
25
Intermittent fasting
செலிபிரிட்டிக்கள் பலரும் பாலோப் செய்யும் intermittent fasting routine-னைத் தான் மலாய்காவும் பாலோப் செய்கிறார். தினமும் ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிடுகிறார், அதையும் இரவு ஏழு டூ ஏழரை மணிக்குள் முடித்துவிடுகிறார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 டூ 18 மணி நேரம் அவரை எதையும் சாப்பிடுவது கிடையாது. முழு பட்டினி தான். இரவில், ஒரு ஆப்பிள் அல்லது தண்ணீர் மட்டும் குடித்து கொள்ளலாம் இது தான் இன்டர்மிட்டண்ட் டயட் முறை.
இதில் 16க்கு 8 என்னும் உணவு முறையை பின்பற்றுகிறார். இந்த உணவுத்திட்டத்தில் முதல் 8 மணி நேரத்தின் போது உணவுகளை உட்கொள்வார்கள். மீதமுள்ள 16 மணி நேரம் உணவு சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த டயட்டை பின்பற்றுவோருக்கு கலோரிகளின் எண்ணிக்கை குறையும், வளர்சிதை மாற்றம் அதிகமாகி எடை வேகமாக குறையும்.
45
Fasting Method to Reduce weight
8 மணி நேரத்தின் போது சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் அளவுகளும் இல்லை. கட்டுப்பாடுகளும் இல்லை. அதுக்காக அட்வான்டெஜ் எடுத்துக் கொள்ளாமல், சத்தான உணவு, பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இடைப்பட்ட 16 மணி நேரத்திற்கு மலாய்கா அரோரா தேங்காய் தண்ணீர், ஜீரா தண்ணீர், லெமன் கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்கிறார். இது அவரை டயார்ட் ஆகாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.
16 மணி நேரம் இடைவேளைக்குப் பிறகும் மலாய்கா அரோரா ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிடுவது கிடையாது, நட்ஸ், சீட்ஸ், ப்ரூட்ஸ் என சத்தான உணவுகளை தான் எடுத்துக்கொள்கிறார். இதனால் தான் 51 வயதிலும் ஃபிட் லுக்கில் மலாய்கா அரோரா வலம் வருகிறாராம்.