வெளிநாட்டில் எளிமையாக 17 வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித் மகள் அனோஷ்கா!

Published : Jan 03, 2025, 06:13 PM IST

தல அஜித்தின் மகள் அனோஷ்கா, இன்று தன்னுடைய 17 ஆவது பிறந்த நாளை வெளிநாட்டில் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.  

PREV
15
வெளிநாட்டில் எளிமையாக 17 வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித் மகள் அனோஷ்கா!
Ajith and Shalini Daughter

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இந்த ஆண்டு விடாமுயற்சி  மற்றும் குட் பேட் அக்லீ என இரு படங்கள் உருவாகி உள்ளன. குறிப்பாக அஜித்தின் 62 ஆவது திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படம், இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிப்புகள் வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லைகா நிறுவனம், புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
 

25
Ajith Upcoming Movies

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே பல சர்ச்சைகளை இப்படம் தொடர்ந்து சந்தித்து வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பையான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் கால சூழல் மாற்றத்தின் காரணமாக, படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதன் பின்னர் அஜித் தன்னுடைய பைக் பயணத்தை தொடர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித் படப்பிடிப்புக்காக சென்ற போது, ஷாலினிக்கு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். அதே போல் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜி 5 கார் ரேஸிலும் கலந்து கொள்ள அஜித் தயாராகி உள்ளார்.

நண்பனையே காதலித்து கரம்பிடித்த நடிகை சாக்ஷி அகர்வால்! குவியும் வாழ்த்து!
 

35
Ajith Vidaamuyarchi postponed

பல தடங்கல்களை தாண்டி அஜித் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து கொடுத்த நிலையில்.. லைகா நிறுவனம் திடீர் என இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என கூறியுள்ளதால் அஜித் ஒருபுறம் கோவமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தன்னுடைய தொழில் ரீதியான பிரச்சனைகளில் இருந்து வெளியேறி தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாட வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் பறந்துள்ளார்.

45
Ajith Family Celebration

அந்த வகையில் இன்று அஜித் - ஷாலினியின் மகள் அனோஸ்காவின், 17-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. மிகவும் எளிமையாக அனோஷ்கா பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. இதில் அஜித், ஷாலினி, ஆத்விக், ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஷங்கர் - ராம் சரண் இணைந்துள்ள கேம் சேஞ்சர்; கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள்!

55
Anoushka 17th birthday

விடாமுயற்சி திரைப்படம், ஜனவரி கடைசி வாரத்திலோ அல்லது பிப்ரவரி மாதத்திலோ வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படம் ரிலீஸில் தாமதமாகும் நிலையில், விடாமுயற்சிக்கு முன்னர் குட் பேட் அக்லீ ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லீ படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாவே நடித்துள்ளது குறிபிடித்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories