நண்பனையே காதலித்து கரம்பிடித்த நடிகை சாக்ஷி அகர்வால்! குவியும் வாழ்த்து!

First Published | Jan 3, 2025, 4:58 PM IST

நடிகை சாக்ஷி அகர்வால், சைலன்ட் ஆக தன்னுடைய சிறிய வயது நண்பரை காதலித்து கரம் பிடித்துள்ள தகவலை புகைப்படத்துடன் அறிவித்துள்ள நிலையில், இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

Sakshi Agarwal Is Model

ஐடி துறையில் பணியாற்றிய சாக்ஷி அகர்வால், மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கால் பதித்து, இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, நடிகையாக மாறினார். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய சாக்ஷி அகர்வாலுக்கு வலுவான வேடத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து தன்னை அடையாளப்படுத்தக்கூடிய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்தார்.

Sakshi Agarwal Acting Rajinikanth Kaala Movie

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 2018 ஆம் ஆண்டு வெளியான 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்தார், இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான 'விசுவாசம்' படத்திலும் நயன்தாரா தோழிகளில் ஒருவராக நடித்தார்.

மீனாவிடம் சில்மிஷம்; மண்டையை உடைத்த விஜயகாந்த்! தயாரிப்பாளர் கூறிய தகவல்!

Tap to resize

Sakshi Agarwal Weds Childhood Friend

சினிமாவில் தன்னை ஹீரோயினாக நிலை நிறுத்திக் கொள்ளும் கனவோடு 2019 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது நடிகர் கவினை இவர் காதலித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கவின் லாஸ்லியாவுக்கு  ரூட்டு விட்டதால்,  அவர் மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் விளைவாக 49-ஆவது நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Sakshi Agarwal Wedding Photos

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக சில்ட்ரல்லா திரைப்படம் இவருடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் விதத்தில் அமைந்தது. அதேபோல் அரண்மனை 3 திரைப்படத்தில், சுந்தர் சிக ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு நான் கடவுள் இல்லை, பகீரா, என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதேபோல் இந்த ஆண்டு இவரின் கைவசம் அதர்ம கதைகள், கெஸ்ட் சாப்டர் 2, தி நைட், என மூன்று படங்கள் உள்ளன.

ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்த சாக்ஷி அகர்வால், சைலண்டாக தன்னுடைய 33 வயதில்... சிறிய வயது நண்பனான நவநீத் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். இந்த தகவலை தன்னுடைய திருமண புகைப்படங்களுடன் சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

ஷங்கர் - ராம் சரண் இணைந்துள்ள கேம் சேஞ்சர்; கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள்!
 

Latest Videos

click me!