cinema
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான்.
ரோஜா படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்ததோடு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.
ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்தார் ஏ.ஆர்.ரகுமான்.
ரோஜா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார் ரகுமான்.
தேசிய விருதுக்கான போட்டியில் ரோஜா படமும் இளையராஜா இசையமைத்த தேவர்மகன் படமும் இருந்தது.
தேசிய விருதுக்கான வாக்கெடுப்பில் ரோஜாவுக்கும், தேவர் மகனுக்கு தலா 6 ஓட்டுகள் கிடைத்து சமமாக இருந்துள்ளன.
இறுதியாக வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டை பாலுமகேந்திரா ரகுமானுக்கு போட்டதால் இளையராஜா ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை பறிகொடுத்தார்.
இளையராஜா திறமைசாளி, ஏ.ஆர்.ரகுமான் முதல் படத்திலேயே வியத்தகு இசையை கொடுத்ததால் அவருக்கு வாக்களித்தாராம் பாலுமகேந்திரா.
ரோஜா படத்துக்காக முதல் தேசிய விருதை வென்ற ரகுமான், தற்போதுவரை 7 தேசிய விருதை வென்று அதிக முறை அவ்விருது வென்ற இசையமைப்பாளார் என்கிற சாதனை படைத்துள்ளார்.