cinema
விஜய் டிவி தொலைக்காட்சி, பல வெள்ளித்திரை நடிகர் - நடிகைகளை உருவாக்கி உள்ளது.
சிவகார்திகேயன், ப்ரியா பவானி ஷங்கர், மகாபா, ரோபோ ஷங்கர், என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிக்கனியை ருசித்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.
தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார் சரவணன் விக்ரம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் கடைக்குட்டி கண்ணனாக நடித்த இவர், அதிரடியாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஒன்னுமே செய்யாமல் பிக்பாஸ் வீட்டில் 80-பது நாளை ஒப்பேத்திய இவர், தற்போது திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
இவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு கடந்த வாரம் துவங்கியது.
இதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து சரவணன் விக்ரம் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
2024-ல் அதிக வசூல் கொடுத்த நடிகைகளின் பட்டியல்!!
ஆஸ்கர் ரேஸில் வெளியேறிய லாபடா லேடீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி
அஜித் ஒரே மாதத்தில் 25 கிலோ வெயிட் லாஸ் பண்ணியது எப்படி?
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 2 படங்கள் ரிலீஸ் ஆகிறதா?