Actor Jiiva
திரையுலகில் எண்ட்ரியாக சில பார்மெட்டுகள் உள்ளன. ஒன்று வாரிசு நடிகராக இருக்க வேண்டும், அல்லது பணக்காரராக இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் ஈஸியாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்துவிடலாம். எந்த வித பின்புலமும் இன்றி சினிமாவுக்கு வருபவர்கள் போராடித்தான் ஜெயிக்க முடியும். தற்போது நாம் பார்க்க போவது முதல் கேட்டகிரியை சேர்ந்தவர்.
Jiiva Birthday
பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன் தான் ஜீவா. இவரின் சினிமா எண்ட்ரி வேண்டுமானால் தந்தையின் தயவில் வந்திருக்கலாம். ஆனால் அதன்பின் அவர் வளர்ச்சி அவரின் கடின உழைப்பால் வந்தது. ஏனெனில் ஆர்.பி.செளத்ரியின் குடும்பத்தில் இருந்து வந்த இன்னொரு நடிகரான ஜித்தன் ரமேஷ், ஜீவா அளவுக்கு சினிமாவில் சோபிக்கவில்லை.
jiiva Movies
2003-ம் ஆண்டு ஆசை ஆசையாய், தித்திக்குதே போன்ற படங்களின் மூலம் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார் ஜீவா. மாதவனுக்கு பின் தமிழ் சினிமாவில் தட்டுப்பாடாக இருந்த பிளே பாய் இடத்தை ஜீவா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தன் ரூட்டை மாற்றி ராம், கற்றது தமிழ் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து என் வழி தனி வழி என நிரூபித்துக் காட்டினார்.
இதையும் படியுங்கள்... 7 வருட காதல்; நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? க்யூட் லவ் ஸ்டோரி!
Jiiva Salary
ஆண்டுக்கு ஒரு ஹிட் படம் என சென்று கொண்டிருந்த ஜீவாவின் கெரியர், சற்று உச்சத்தை தொட்டது சிவா மனசுல சக்தி படம் மூலம் தான். எம்.ராஜேஷ் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவான இதில் ஜீவாவின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக இருக்கும். இதையடுத்து கேவி ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்த கோ திரைப்படம் ஜீவாவின் கெரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது.
Jiiva Net Worth
இப்படி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த ஜீவாவுக்கு தளபதி விஜய்யுடன் நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனக்கு கிடைத்த ரோலை கணக்கச்சிதமாக செய்து அப்ளாஸ் வாங்கினார் ஜீவா. பின்னர் கெளதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம், ராஜு முருகனின் ஜிப்ஸி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
Jiiva Wife
கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த பிளாக் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது பா விஜய் இயக்கத்தில் அகத்தியா என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. அவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரூ.90 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாராம் ஜீவா. இவரிடம் விலையுயர்ந்த சொகுசு கார்களும் உள்ளன. இவருக்கு சொந்தமாக சென்னையில் உணவகம் ஒன்றும் உள்ளது. அதை அவரது மனைவி நிர்வகித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... “நான் கேட்காமலே நடிகர் ஜீவா எனக்கு மாசம் ரூ.15,000 அனுப்பிட்டு வராரு..” பிரபல காமெடி நடிகர் உருக்கம்..