Ranveer Singh - Deepika Padukone
பாலிவுட்டில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு 'பச்னா ஏ ஹசீனோ' படத்தில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினார். அப்போது தனது கழுத்தில் ரன்பீர் கபூரின் பெயரை டாட்டூவாகப் போட்டுக் கொண்டார் தீபிகா. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு பிரேக் அப் செய்தனர். ரன்வீரை பிரிந்ததால் தீபிகா மன உளைச்சலுக்கு ஆளானார். இதை தீபிகாவே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
Ranveer Singh - Deepika Padukone Love Story
பின்னர், 'ராம்-லீலா' படப்பிடிப்பில் மீண்டும் ரன்வீர் சிங்கை சந்தித்தார் தீபிகா. இந்த சந்திப்பு நட்பாக மாறி நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் மீண்டும் தங்கள் காதல் வாழ்க்கையை தொடங்கி சில ஆண்டுகள் உருகி உருகி காதலித்த பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியின் லேக் கோமோ நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. தீபிகா - ரன்வீருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் துவா.
இதையும் படியுங்கள்... ஒரே நபரை இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்!
Ranveer Singh - Deepika Padukone Marriage
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக வலம் வருகின்றனர். தீபிகாவுக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்ததால் அவர் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். அதே நேரத்தில் ரன்வீர் சிங் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில், கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண் 7' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், தனது படுக்கையறை ரகசியங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தனது முதலிரவு ரகசியத்தை பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ranveer Singh Says about First Night
அந்நிகழ்ச்சியில் கரண், ரன்வீருக்கு பிங்கோ விளையாட்டை விளையாடச் சொன்னார். திருமண சடங்குகளுக்குப் பிறகு சோர்வாக இருந்தீர்களா என்று கரண் கேட்டபோது, ரன்வீர் இல்லை என்று தலையை ஆட்டினார். தானும் தீபிகாவும் முதலிரவில் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். தனது வேனிட்டி வேனிலும் இதைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். மனநிலையை மாற்றவும் உணர்ச்சியை தூண்டும் விதமான பல பாடல் பிளேலிஸ்ட் தன்னிடம் இருந்ததாகவும் கூறினார். ரன்வீர் சிங்கின் இந்த வெளிப்படையான பேச்சு கரண் ஜோஹர் உட்பட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படியுங்கள்... நச்சுன்னு 3 எழுத்தில் மகளுக்கு பெயர் சூட்டிய ரன்வீர் - தீபிகா ஜோடி! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்!