Richest Actress
பொதுவாக, திரை பிரபலங்களின் வெற்றி அவர்கள் சமீபத்தில் நடித்த படங்களில் எத்தனை படங்கள் ஹிட்டானது எத்தனை படம் பிளாப் என்ற எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் பகுப்பாய்வுக்குப் பிறகு, நடிகர்களின் சம்பளமும் உயர்கிறது. இதனால் நடிகர்கள், நடிகைகளின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்கிறது.
Juhi Chawla
இந்தியாவில் பல பணக்கார நடிகைகள் உள்ளனர். ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார இந்திய நடிகை யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நடிகையின் கடைசி படம் 2019 இல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறிய இவர் மற்ற வெற்றிகரமான முயற்சிகளையும் கொண்டிருந்தார், அதுதான் அவரை பணக்கார இந்திய நடிகையாக மாற்றியது. அவர் வேறு யாருமில்லை. பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தான்.
Juhi Chawla
கயாமத் சே கயாமத் தக் படத்தில் அமீர் கானுடன் அறிமுகமானவர் நடிகை ஜூஹி சாவ்லா. ராஜு பன் கயா ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் ராதா போல், இஷ்க், தீவானா மஸ்தானா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
Juhi Chawla-Shah Rukh Khan
ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்ட Hurun India Rich List இன் 2024 பதிப்பில், ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ.4600 கோடியாக இருந்தது. இது தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் அல்லது தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் அல்லது ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகைகளின் சொத்து மதிப்பை விட இது அதிகம்.
Juhi Chawla
எனவே ஜூஹி சாவ்லா இந்திய பணக்கார நடிகையாக இருக்கிறார். ஜூஹி சாவ்லாவின் வருமானம் பெரும்பாலும் திரைப்படங்களில் இருந்தே வருகிறது. ஆனால் திரைப்படங்களை தவிர, தனது கணவர் தொழிலதிபர் ஜெய் மேத்தா மற்றும் நண்பர் ஷாருக்கானுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் குழுமத்தின் இணை நிறுவனராகவும் ஜூஹி சாவ்லா இருக்கிறார்.. ஜூஹி மற்றும் ஜெய் இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் இரண்டு பிரபல உணவகங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
Juhi Chawla
ஜூஹி சாவ்லா 2023-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான Friday Night Plan திரைப்படத்தில் நடித்திருந்தார்.. அதே ஆண்டில், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தி ரயில்வே மென் என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். ஜூஹியின் கடைசி பெரிய திரை வெளியீடு ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா படம் தான். இந்த படம் 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.