Bharath Kalyan Wife death: பிரபல சின்னத்திரை நடிகர் பாரத் கல்யாண் மனைவி அதிர்ச்சி மரணம்..!

Published : Oct 31, 2022, 03:14 PM IST

பிரபல சின்னத்திரை நடிகர் பாரத் கல்யாணின் மனைவி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த தகவல்  சீரியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
15
Bharath Kalyan Wife death: பிரபல சின்னத்திரை நடிகர் பாரத் கல்யாண் மனைவி அதிர்ச்சி மரணம்..!

பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பாரத் குமார் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் (2007) ஆம் ஆண்டு அறிமுகமானார்.  பின்னர் யக்கா, பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜா,போன்ற கன்னடப் படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷ் நடித்த சுல்லான்... போன்ற படங்களில் நடித்துள்ளார்.

25

திரைப்படங்கள் மட்டும் இன்றி, 'கனா காணும் காலங்கள்', 'பாரதி கண்ணம்மா', 'கண்ணான கண்ணே' , 'ஜமீலாவின் அப்பா' போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நெருங்கிய நண்பரும் நடிகருமான ராஜ் கமல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போட்டுள்ள ஒரு பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் யார் ஸ்ட்ராங்? யார் வெளியேறுவார்? போட்டியாளர்களுக்குள் நடக்கும் பேச்சு! வெளியான புரோமோ!
 

35

அதாவது 'ரெஸ்டின் பீஸ் டியர் பிரியாமா' என பதிவிட்டு பாரத் கல்யாணை மிகவும் தைரியமாக இருக்கும் படியும் இந்த குறிப்பிட்டுள்ளார் அதோடு மட்டுமன்றி பாரத் கல்யாண் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இதில் பதிவிட்டுள்ளார்.

45

பாரத் கல்யாண் தன்னுடைய மனைவி பிரியா தர்ஷினியுடன் இணைந்து, பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 43 வயதில், பிரியா தர்ஷினி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்: இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் பிக்பாஸ் காணாமல் போய்விடும்! நடிகர் மன்சூர் அலிகானின் சூப்பர் பிளான்!
 

55

இவரது மரணம் குறித்து தகவல் வெளியான பின்னர் நடிகர் பாரத் கல்யாணுக்கு... அவரது சக நடிகர்கள், நடிகைகள், வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் போன்ற பலர் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய மனைவி இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Samantha: வேதனையில் இருக்கும் சமந்தாவுக்கு 'சீக்கிரம் குணமாகிவிடுவீங்க' என ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார்!
 

click me!

Recommended Stories