Samantha: வேதனையில் இருக்கும் சமந்தாவுக்கு 'சீக்கிரம் குணமாகிவிடுவீங்க' என ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார்!

Published : Oct 31, 2022, 09:32 AM IST

நடிகை சமந்தா மையோசிட்டிஸ் என்கிற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, வேதனையோடு சிகிச்சை பெற்று வரும் நிலையில்... 'சீக்கிரம் குணமடைவீர்கள்' என ஆறுதல் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.  

PREV
16
Samantha: வேதனையில் இருக்கும் சமந்தாவுக்கு 'சீக்கிரம் குணமாகிவிடுவீங்க' என ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில், நயன்தாராவுக்கு நடிப்பிலும், நடனத்திலும், அழகிலும் செம்ம டஃப்  கொடுத்து வருபவர்... சமந்தா தான். திருமணத்திற்கு இவருக்கு இந்த மார்க்கெட்டை விட, திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்தும், வெற்றிப்படங்களாக அமைந்தது மட்டும் இன்றி, இவரது நடிப்பு திறமையை வெளியே கொண்டு வரும் சவாலான கதாபாத்திரமாக அமைந்தது.

26

சுமார் 9 வருடங்கள், காதலித்த... நாகசைதன்யாவை பெற்றோர் சம்மதத்துடன்... கோவாவில் கரம் பிடித்த சமந்தா... சிறந்த நடிகை என்பதை தாண்டி, சிறந்த மனைவி, சிறந்த மருமகள் என திரையுலகினர் அனைவரும் பொறாமைப்படும் படி வாழ்ந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, சமந்தா - நாக சைத்தாயா வாழ்க்கையில் ஏற்பட்ட சிறிய விரிசல் பின்னர் நிரந்தரமாக பிரியும் அளவிற்கு  மாறி விட்டது.

மேலும் செய்திகள்: Vedhika : மத்திய அழகை காட்டி மயக்கும் வேதிகா..சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
 

36

விவாகரத்துக்கு பின்னர், மனஉளைச்சலில் இருந்தது வெளியே வர... பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்ற சமந்தா ஒருவழியாக கணவர் நினைவில் இருந்து மீண்டு, மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால், இப்போது வேறு ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் இவருக்கு தெலுங்கு திரையுலக சூப்பர் சிரஞ்சீவி சீக்கிரம் குணமாகி விடுவீர்கள் என ஆறுதல் கூறியுள்ளார்.
 

46

இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்திருந்த சமந்தா, மருத்துவர்கள் தனக்கு மையோட்டிஸில் என்கிற உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். ஒரு எதிர்ப்பு சக்தி குறைபாடாகும். இதற்காக தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து சமந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் செய்திகள்: குஷ்பூ கோவிலை பார்த்து பொறாமைப்பட்டேனா ?..உண்மையை உடைத்த சுந்தர் சி
 

56

தற்போது சமந்தாவிற்கு, பிரபல நடிகர் சிரஞ்சீவி சமூக வலைத்தளம் மூலம் விரைவில் குணமடைவீர்கள் என ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... அன்புள்ள சமந்தா, உங்கள் வாழ்க்கையில் அவ்வப்போது இது போன்ற சவால்கள் நமக்கு வரும். அவற்றின் மூலம் நம்மையே நாம் யார் என்று கண்டுணர முடியும்.
 

66

நீங்கள் அருப்புதமான மனவலிமை கொண்ட தைரியமான பெண். இந்த கடினமான காலத்தை சீக்கிரம் கடந்து வருவீர்கள் என்கிற நம்பிக்கை உண்டு. உங்களுக்கு ஆற்றலும், தைரியமும் கிடைக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். விரைவில் சமந்தா நடித்த, யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: sneha : சுடிதாரில் சொக்க வைக்கும் நடிகை சினேகா...சூப்பர் கூல் போட்டோஸ்
 

Read more Photos on
click me!

Recommended Stories