முன்னணி நடிகை சமந்தா சமீபத்தில், தனக்கு மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், நினைத்ததை விட இந்த பிரச்சனை குணமாவதற்கு நாட்கள் எடுப்பதாக தெரிவித்திருந்தார். இவரது இந்த தகவல் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியடை செய்த நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.