வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்... என்ன சீமான் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - ஷாக் ஆன ரசிகர்கள்

First Published | Apr 10, 2023, 10:21 AM IST

தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன், மனித வடிவில் இருக்கும் மிருகம் என சீமான் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராகவும், தலை சிறந்த ஒளிப்பதிவாளராகவும் வலம் வந்தவர் பாலு மகேந்திரா. அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் வெற்றிமாறன். இவர் தற்போது தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். பொல்லாதவனில் இருந்து விடுதலை வரை இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் 2 வாரங்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. விடுதலை படம் பார்த்து திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சூரி மற்றும் வெற்றிமாறன் உடன் இணைந்து விடுதலை படம் பார்த்து அவர்களை புகழ்ந்து தள்ளினார். அதேபோல் அரசியல் தலைவர்களான திருமாவளவன், சீமான் ஆகியோரும் விடுதலை படத்தை வியந்து பாராட்டினர்.

இதையும் படியுங்கள்... Ponniyin selvan 2 : அஜித் படத்தால் முடிவை மாற்றிய லைகா... பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Tap to resize

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் வெற்றிமாறனையும் புகழ்ந்து பேசினார். அதில் அவர் பேசியதாவது : “பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் இருந்தனர். அந்த வரிசையில் ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் சிறந்த படங்களை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விடுதலை போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்க கடும் உழைப்பை கொட்ட வேண்டும். அதனை வெற்றிமாறன் செய்துள்ளார். காட்டுக்குள் பயணித்து மலை ஏறி கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். மனித வடிவில் இருக்கும் மிருகம் அவர், அதனால் தான் அந்த வெறியில் அவர் படத்தை எடுத்திருக்கிறார். இது பாராட்டத்தக்க விஷயம்” என சீமான் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... மீண்டும் இணைந்த கர்ணன் கூட்டணி.. கேப்டன் மில்லர் லுக்கில் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ் !!

Latest Videos

click me!