Ponniyin selvan 2 : அஜித் படத்தால் முடிவை மாற்றிய லைகா... பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

First Published | Apr 10, 2023, 8:39 AM IST

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய பிரம்மாண்ட படைப்பு தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய கதாபாத்திரங்களை அப்படியே கண்முன் நிறுத்தி அசர வைத்திருந்தார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசாகி வசூல் வேட்டையாடிய நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம், மணிரத்னம் ஆகியோர் முதல் பாகத்தை புரமோட் செய்தது போல் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை புரமோட் செய்ய உள்ளனர்.

Tap to resize

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் உரிமைகளும் விற்கப்பட்டு வருகின்றன. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யாமல் லைகா நிறுவனமே இப்படத்தை தங்கள் சொந்த பேனரில் வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... மீண்டும் இணைந்த கர்ணன் கூட்டணி.. கேப்டன் மில்லர் லுக்கில் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ் !!

ஏனெனில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை வெளிநாட்டில் பல்வேறு விநியோக நிறுவனங்களுக்கு கொடுத்திருந்தது லைகா. அப்படத்தை ரிலீஸ் செய்த நிறுவனங்களும் நல்ல லாபம் பார்த்தனர். ஆனால் இந்த முறை லைகாவே சொந்தமாக இப்படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததற்கு அஜித்தின் துணிவு படம் தான் காரணமாம். துணிவு படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் தான் வெளியிட்டது. அப்படம் அந்நிறுவனத்துக்கு வசூலை வாரிக் கொடுத்தது. 

அஜித்தின் கெரியரில் வெளிநாடுகளில் அதிக கலெக்‌ஷன் செய்த படம் என்கிற சாதனையையும் துணிவு படைத்திருந்தது. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 படத்தையும் பிற நிறுவனங்களுக்கு கொடுக்காமல் தாங்களே ரிலீஸ் செய்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ள லைகா, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. லைகாவின் இந்த முடிவு வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... IPL 2023: காரை பின் தொடர்ந்து சென்ற மாற்றுத்திறனாளி: வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டிய ப்ரீத்தி ஜிந்தா!

Latest Videos

click me!