லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

Published : Apr 09, 2023, 06:59 PM IST

லெஜன்ட் சரவணன் உடன் குக் வித் கோமாளி மணிமேகலை எடுத்துக்கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
16
லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் புகழ்பெற்றார் மணிமேகலை. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

26

ஏற்கனவே சன் மியூசில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர் சதிருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

36

திருமணத்துக்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை குக் வித் கோமாளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென வெளியேறினார்.

இதையும் படியுங்கள்... ‘புஷ்பா 2’ படத்துக்காக சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அல்லு அர்ஜுன்..! அதுக்குன்னு இவ்வளவா?

46

எந்த காரணத்தினால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. அதனை குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் சரி, மணிமேகலையும் சரி இரண்டு தரப்பிலும் தெரிவிக்கவில்லை.

56

இந்த நிலையில் குக் வித் கோமாளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் தற்போது தாடி வைத்து புது கெட்டப்பில் இருந்த புகைப்படங்கள் வெளியானது.

66

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை லெஜண்ட் சரவணன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்து உள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இந்த குக்கும் அவுட்டா... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories