கிஸ் கொடுத்தா ராகவா லாரன்ஸ் படத்துல சான்ஸ்... அட்ஜெஸ்மெண்ட் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சொன்ன பகீர் சம்பவம்

First Published | Apr 3, 2023, 3:10 PM IST

கிஸ் கொடுத்தால் ராகவா லாரன்ஸ் படத்துல தங்கச்சியா நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையிடன் ஒருவர் டீல் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் அண்ணன் தம்பிகள் 4 பேரும், திருமணமான பின் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லி வரும் இந்த சீரியல் இந்த அளவுக்கு வரவேற்பை பெற முக்கிய காரணம் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான். அனைவருமே தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பியாக நடிக்கும் 4 பேரும் சீரியல் தொடங்கியதில் இருந்து மாறாமல் இருந்தாலும், அவர்களுக்கான ஜோடி அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு இந்த சீரியலின் ஹீரோயினான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து இறந்துபோனதால் அவருக்கு பதில் இரண்டு மூன்று நடிகைகளை மாற்றிவிட்டனர்.

Tap to resize

இதற்கு அடுத்தபடியாக அதிகம் மாற்றப்பட்டது ஐஸ்வர்யா கேரக்டர் தான். சீரியலில் கடைசி தம்பியின் ஜோடி தான் இந்த ஐஸ்வர்யா கேரக்டர். முதலில் இந்த கேரக்டரில் விஜே தீபிகா நடித்து வந்தார். பின்னர் திடீரென அவர் விலகியதால் அவருக்கு பதில் சாய் காயத்ரி ஐஸ்வர்யாவாக நடித்து வந்தார். சமீபத்தில் சாய் காயத்ரியும் இந்த சீரியலை விட்டு விலகியதால், அவருக்கு பதிலாக மீண்டும் விஜே தீபிகாவே ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... விடுதலை vs பத்து தல... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது யார்? - வெளியானது கலெக்‌ஷன் ரிப்போர்ட்

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை விஜே தீபிகா, தான் எதிர்கொண்ட அட்ஜஸ்மெண்ட் பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அதன்படி ஒரு படத்தில் ராகவா லாரன்சுக்கு தங்கையாக நடிக்க வரச்சொல்லி ஆடிசனுக்கு அழைத்திருந்தார்களாம். இவரும் அதற்காக ஆடிசன் சென்றபோது அங்கு ஒரு ரூமில் ஒரு நபர் தனியாக அமர்ந்திருந்தாராம். அவர் இந்த ரோலுக்கு படத்தில் முத்தக் காட்சி இருப்பதாகவும், அதைதான் தற்போது நடித்துக் காட்ட வேண்டும் என்று கூறினாராம்.

அந்த மாதிரி காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது, வேறு ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்கன்னு கேட்டபோது, அதெல்லாம் கொடுக்க முடியாது, உனக்கு முன்னாடி 8 பேர் வந்து கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்கனு அந்த நபர் சொன்னாராம். இப்படி வெளிப்படையாகவே பட வாய்ப்புகாக அட்ஜஸ்மெண்ட் கேட்கிறார்கள் என விஜே தீபிகா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Rashmika mandanna : சமந்தா தவறவிட்ட தமிழ்படத்தை தட்டித்தூக்கிய ராஷ்மிகா - டைட்டிலுடன் வெளிவந்த அப்டேட்

Latest Videos

click me!