இந்த குக்கும் அவுட்டா... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

First Published | Apr 9, 2023, 1:29 PM IST

புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் விசித்ரா, மைம் கோபி, காளையன், விஜே விஷால், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் உள்பட 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக இதற்கு முந்தையை சீசன்களில் கோமாளியாக கலக்கி வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஆரம்பமாகி இதுவரை 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிவிட்டனர்.அவர்கள் 3 பேருமே ஆண்கள் தான். அதன்படி இதுவரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, ஆகியோர் தான் எலிமினேட் ஆகி உள்ளனர். இந்த நிலையில், 4-வது எலிமினேஷனுக்கான போட்டியில் மைம் கோபி தவிர எஞ்சியுள்ள 6 போட்டியாளர்கள் போட்டியிட்டனர். ஏனெனில் மைம் கோபி கடந்த வாரம் இம்யூனிட்டி பேண்ட் வாங்கியதால் அவர் இந்த வாரம் சமைக்கவில்லை.

இதையும் படியுங்கள்... ‘புஷ்பா 2’ படத்துக்காக சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அல்லு அர்ஜுன்..! அதுக்குன்னு இவ்வளவா?

Tap to resize

இதனால் விசித்ரா, ஸ்ருஷ்டி, ஷெரின், விஜே விஷால், ஆண்ட்ரியன், சிவாங்கி ஆகிய 6 பேருக்கு இடையே தான் இந்த வாரம் எலிமினேஷன் டாஸ்க் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வாரம் நடந்த எலிமினேஷன் டாஸ்க்கில் கம்மியான மார்க் வாங்கிய விஜே விஷால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி உள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் எலிமினேட் ஆன ஆண் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அவரும் இணைந்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் தான் நடுவர்களிடம் இருந்து சூப்பர் கமெண்ட்ஸ்களை வாங்கிய விஜே விஷால், இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுமாராக சமைக்கும் ஸ்ருஷ்டி, ஷெரின் போன்றவர்களை காப்பாற்றிவிட்டு விஜே விஷாலை ஏன் எலிமினேட் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்...  vadivelu : வடிவேலு நல்லா குடிப்பார்... அவர் வடிவேலு இல்ல குடிவேலு - பிரபல இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Latest Videos

click me!