அம்மாவின் நம்பிக்கை... ரசிகர்களின் ஆசை! த.வெ.க கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

Published : Aug 19, 2024, 10:34 PM IST

தளபதி விஜய், இன்று தன்னுடைய கட்சி கோடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி பார்த்து ஒத்திகையில் ஈடுப்பட்டபோது ஈடுபட்ட புகைப்படம் வைரலாக நிலையில், இந்த கொடி குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
அம்மாவின் நம்பிக்கை... ரசிகர்களின் ஆசை! த.வெ.க கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
Thalapathy Vijay

தளபதி விஜய், நடிப்பில் உருவாகியுள்ள 'GOAT' திரைப்படம், செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் தளபதி தன்னுடைய அரசியல் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது.
 

25
TVK Political Party

விஜய் தற்போது துவங்கியுள்ள த.வெ.க கட்சி சார்பில், 2026-ஆம் ஆண்டு வர உள்ள சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், 69-ஆவது படம் துவங்குவதற்கு முன்பே... மாநாடு மற்றும் கட்சி கொடி, சின்னம் போன்ற சில முக்கிய தகவலை வெளியிட  ஆயத்தமாகி உள்ளார்.

உன் டியூன் சரி இல்லை... அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்ட இளையராஜாவின் முதல் வாய்ப்பு குறித்து பகிர்ந்த வாலி!

35
Vijay TVK Party Flag

அதன்படி ஆகஸ்ட் 22-ஆம் தேதி விஜய் தன்னுடைய கட்சி கொடியை அறிவிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானது. மேலும் இன்று விஜய் தன்னுடைய புதிய காரில்... பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு திடீர் என வந்தார். அவரை புஸ்ஸி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார். விஜய் உள்ளே சென்ற சில நிமிடங்களில் கட்சி கொடியை ஏற்ற தயாராக உள்ள கம்பத்தில்... விஜய் தன்னுடைய கட்சி கொடியை ஏற்று ஒத்திகை பார்த்தார்.
 

45
Secret Behind TVK Flag

இந்த கோடி முழுக்க... முழுக்க மஞ்சள் நிறத்தில், விஜய்யின் புகைப்படத்துடன் இருந்தது. விஜய்யின் இந்த கொடிக்கு பின்னால்  இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அம்மா தீவிர சாய் பாபா பக்தர், எனவே தன்னுடைய அம்மா ஆசை படி சாய் பாபாவுக்கு உயர்ந்த நிறமாக பார்க்கப்படும் மஞ்சள் நிறத்தை இந்த கொடியில் இடம்பெற செய்துள்ளார். அதே போல் விஜய் ரசிகர்கள் ஏற்கனவே விஜய்க்காக விஜய்யின் முகம் பதித்த வெள்ளை நிற கொடி ஒன்றை பயன்படுத்தி வந்தனர். தன்னுடைய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக விஜய் தன்னுடைய புகைப்படத்தை கொடியில் இடம்பெற ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் கட்சி கொடி வெளியானது!

55
TVK Vijay

மேலும் கொடியை தன்னுடைய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முன்னாள் விஜய் கட்சி கொடியை வெளியிட முடிவெடுத்துள்ளார். கட்சியினர் அமர ஏற்பாடுகள் கட்சி அலுவலகத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories