உதயநிதி ரிலீஸ் செய்த சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் பாதியில் நிறுத்தம் - என்ன பிரச்சனை தெரியுமா?

Published : Jul 29, 2022, 09:50 AM IST

GuluGulu FDFS : சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் குலுகுலு திரைப்படம் திரையிடப்பட்ட சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
14
உதயநிதி ரிலீஸ் செய்த சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் பாதியில் நிறுத்தம் - என்ன பிரச்சனை தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் குலுகுலு. ஆடை, மேயாதமான் போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். சாந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

24

குலுகுலு திரைப்படம் இன்று தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தான். அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் குலுகுலு படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது. குலுகுலு படத்திற்கு இன்று காலை ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது. இதற்காக பட்டாசு வெடித்தும் பாலாபிஷேகம் செய்தும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் பல கோடி கொடுத்து வாங்கிய சமந்தா - சைலண்டாக நடந்து முடிந்த டீல்

34

அந்தவகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ரோகினி திரையரங்கில் குலுகுலு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு சந்தானம் ரசிகர்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் சந்தானம் ரசிகர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் தியேட்டருக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

44

இதனால் டிக்கெட் எடுத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல் போனதாம், இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் டிக்கெட் எடுக்காதவர்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதன்பின்னரே குலுகுலு படம் மீண்டும் திரையிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையும் படியுங்கள்... என் மகன் அதிகம் கஷ்டப்பட்டுருக்கான்... அசிங்கப்பட்டிருக்கான்..! தனுஷ் பற்றி பேசி மேடையில் கலங்கிய கஸ்தூரி ராஜா

Read more Photos on
click me!

Recommended Stories