மலையாள நடிகையான அஸ்வதி பாபு, சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக சின்னத்திரையில் பேமஸான நடிகையாக வலம் வந்த இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். அதில் ஒன்று தான் விபச்சார கேஸ். இளம் பெண்களை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை வைத்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் விபச்சாரம் நடத்தி வந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார் அஸ்வதி.