'விருமன்' படத்தின் சென்சார் தகவல் வெளியானது!

Published : Jul 28, 2022, 11:14 PM IST

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'விருமன்' படத்தின் சென்சார் தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  

PREV
14
'விருமன்' படத்தின் சென்சார் தகவல் வெளியானது!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, தன்னுடைய சகோதரர் சூர்யா தயாரிப்பில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. முத்தையாவின் இயக்கம் என்றாலே அது கண்டிப்பாக கிராமத்து கதை காலமாக தான் இருக்கும். அதே போல் இந்த படமும் கிராமத்து மனம் கமழும் கதையாகவே உள்ளது. இந்த படத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
 

24
viruman

இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில்,  ஆகஸ்ட் மாதம் 'விருமன்' படம் வெளியாக உள்ளது. எனவே இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 'விருமன்' படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, இந்த படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 
 

34

அடுத்த மாதம் கார்த்தியின் 'விருமன்' வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் மாதம், கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாக உள்ளது. அக்டோபர் மாதம், தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சர்தார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிபிடித்தக்கது.
 

44

விருமன் படத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் என பிரீபான் செய்யப்பட்டு, சொன்ன தேதிக்கு முன்னதாகவே அதாவது விக்ரம் நடித்த கோப்ரா படம் வெளியாகும் தேதியான ஆகஸ்ட் 11-ந் தேதியே விருமன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories