சிம்பு இப்படி மாறுவார்னு நான் எதிர்பார்க்கல... முன்பு மாதிரி நாங்க பேசுறதில்ல - சந்தானம் கூறிய அதிர்ச்சி தகவல்

First Published | Jul 23, 2023, 1:58 PM IST

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான சந்தானம், சமீபத்திய பேட்டியில் சிம்பு குறித்து கூறிய தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கி வந்த சந்தானத்தின் திறமையை பார்த்து வியந்து போன சிம்பு அவருக்கு தன்னுடைய காதல் அழிவதில்லை படத்தில் காமெடியனாக நடிக்க வாய்ப்பளித்தார். இதையடுத்து தொடர்ந்து சிம்பு உடன் மன்மதன், வல்லவன், வானம் போன்ற படங்களில் பணியாற்றினார் சந்தானம்.

தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த சந்தானம், ஹீரோவான பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்தார். இதனால் தற்போது முழுநேர ஹீரோவாக மாறியுள்ள அவர், பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் ஹீரோவாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் சந்தானம்.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டும் இந்தியன் 2... ஆத்தாடி ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

Tap to resize

அந்த வகையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு பற்றி சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் சந்தானம். அவர் கூறியதாவது : “ஆரம்பத்தில் இருந்தே சிம்புவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். தற்போது அவர் ஆன்மீக புத்தகங்களை படித்தும், அது சம்பந்தமான யூடியூப் வீடியோக்களை பார்த்தும் முழுமையாக ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார். இவ்ளோ ஆழமாக ஆன்மீகத்தில் இறங்குவார்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல.

திருவண்ணாமலைக்கு அடிக்கடி போய் அங்குள்ள சித்தர்களை பார்த்து வருகிறார். முன்பெல்லாம் அவரை சந்தித்தால் மணிக்கணக்கில் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். ஆனால் இப்போதெல்லாம் சந்தித்தால் இருவரும் ஆன்மீகத்தை பற்றி தான் அதிகம் பேசுகிறோம். அவர் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை எனக்கு சொல்வார். அவர் தற்போது ஒரு தனி டிராக்கில் டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கார் என சந்தானம் கூறினார். விரைவில் சிம்பு கல்யாணம் செய்துகொள்வார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சந்தானம் சொன்னதை பார்த்த பின்னர் அப்போ இனி சிம்பு கல்யாணம் செய்துகொள்ளாமல் ஆன்மீகவாதியாகவே இருந்து விடுவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... டைவர்ஸ் ஆனாலும்.. அவரை இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்! ராமராஜன் மீதான தீராக்காதல் பற்றி மனம்திறந்த நளினி

Latest Videos

click me!