ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டும் இந்தியன் 2... ஆத்தாடி ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

First Published | Jul 23, 2023, 1:01 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் இந்தியன் 2. அந்த சமயத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படம் தற்போது 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திலும் கமல்ஹாசன் தான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஷங்கருடன் அவர் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை ஆகும். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கமல் சம்பந்தமான காட்சிகளை முடித்துவிட்ட ஷங்கர், இன்னும் ஓரிரு வாரங்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விடுவார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... டைவர்ஸ் ஆனாலும்.. அவரை இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்! ராமராஜன் மீதான தீராக்காதல் பற்றி மனம்திறந்த நளினி

Tap to resize

இந்தியன் 2 படத்திற்காக சுமார் 4 மணிநேரம் மேக்கப் போட்டு மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர உள்ளனர். இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருந்தாலும், தற்போதே அப்படத்திற்கான பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி தற்போது இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம்.

சுமார் ரூ.220 கோடிக்கு அந்நிறுவனம் இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படமே மொத்தமாக ரூ.250 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் தற்போதே ஓடிடி உரிமையை விற்பனை செய்ததன் மூலம் 90 சதவீத பணம் வந்துவிட்டதால், படக்குழு செம்ம ஹாப்பியாக உள்ளதாம். இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... என்னது குணசேகரனின் மனைவி ஈஸ்வரி தான் ஜீவானந்தத்தின் லவ்வரா? எதிர்நீச்சல் சீரியலில் மிகப்பெரிய டுவிஸ்ட்

Latest Videos

click me!