சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் சந்தானம் நடித்து வரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
நடிகர் சந்தானம் நடித்து வரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
காமெடியனாக திரையுலகில் உச்சத்தை தொட்ட சந்தானம், தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக, படக்குழு அதிகார பூர்வாமாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
சந்தானம் தொடர்ந்து காமெடி கலந்த ஆக்சன் மற்றும் ஹாரர் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், இதன் இரண்டாம் பாகம் தில்லுக்கு துட்டு 2' என்கிற பெயரில் 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இடையில் இவர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், 'தில்லுக்கு துட்டு' சீரிஸில் ஹாரர் படமாக உருவான படங்கள் சந்தானத்துக்கு தொடர்ந்து கை கொடுத்து. குறிப்பாக இந்த படத்தின் மூன்றாம் பாகமாக வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார்.
முகூர்த்தக்கால் நட்டாச்சு! ரம்யா பாண்டியன் வீட்டில் மற்றொரு திருமணம் - குவியும் வாழ்த்து!
மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்து வரும் திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், சமீபத்தில் இந்த படம் குறித்த பல அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியானது. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இணைந்து நடிக்கிறது. குறிப்பாக கௌதம் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் பட குழு அறிவித்தது. அதன்படி மே மாதம் இப்படம் ரிலீஸ் ஆகும் என புதிய போஸ்டரோடு சந்தானத்தின் பிறந்தநாள் அன்று அறிவித்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்து விட்டதாக, படக்குழு அதிகார பூர்வமாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!
'டிடி நெக்ல்ஸ் லெவல்' திரைப்படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது. இதே நாளில் தான் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.