'லியோ' படத்தில் தளபதிக்கு தந்தை இவரா? வேற லெவல் இருக்கும் போலயே படம்.. வெளியான மாஸ் அப்டேட்!

First Published | May 18, 2023, 11:23 PM IST

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'லியோ' படத்தில் அவரின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

தளபதி விஜய், 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே, வசூல் ரீதியாக சுமாரான்ன கலெக்ஷனை பெற்றாலும், விமர்சனம் ரீதியாக விஜய்க்கு அதிருப்தியையே ஏற்படுத்தியது.

எனவே தன்னுடைய அடுத்த படத்தை எப்படியும் வெற்றி படமாக மாற்ற வேண்டும் என 'லியோ' படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் தளபதி. மேலும் இப்படத்தை கடந்த ஆண்டின் டாப் டக்கர் ஹிட் அடித்த 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலிருந்து அதிகமாக உள்ளது.

கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த மிருணாள் தாகூர்! போட்டோஸ்
 

Tap to resize

மேலும் இப்படம் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் படமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

ஏற்கனவே வெளியான தகவலில், இப்படம் ஒரு கேங்ஸ்டார் படமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், போன்ற பிரபலங்கள் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Rajinikanth: மகள் ஐஸ்வர்யா செய்த குளறுபடி! கடும் கோபத்தில்.. கறாராக பேசி எச்சரித்த ரஜினிகாந்த்?

அந்த வகையில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் மட்டும் இன்றி, 'லியோ' படத்தில், விஜயின் தந்தையாகவும் நடித்து வருகிறாராம். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் காஷ்மீரில் படம் பார்க்கப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சென்னையிடம் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் அப்பா மகன் கெமிஸ்ட்ரி, துப்பாக்கி படத்திற்கு பின்னர் 'லியோ' படத்தில் அதிகமாக பேசப்படும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கதிர், உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்களில் லலித் குமார் தயாரித்து வருகிறார். இப்படம் படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2024 பாராளுமன்றமே.. 2026 தமிழக சட்டமன்றமே! அரசியல் களத்தில் பீதியை கிளப்பிய விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

Latest Videos

click me!