ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்க பல இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில், தன்னுடைய நேரத்தை, ஐஸ்வர்யா மகள் என்கிற உரிமையை பயன்படுத்தி வீணாக்குவதை பொறுக்க முடியாமல் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம், கறாராக பேசிவிட்டு, மும்பையில் இருந்து சென்னை திரும்பி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது, சமூக வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.